பஜர் (அதிகாலை) தொழுகை


    இஸ்லாமிய உலகத்திலே ரஸூல் (ஸல்) அவர்களுக்கு , அவரின் சொல் செயல் அனைத்திற்கும் பெரு மதிப்பு இருக்கிறது . இது உலக முடிவு நாள் வரையிலும் இருக்கும் . அவர்கள் இறை செய்தியை முழுமையாக சொல்லிவிட்டே  சென்றுள்ளார்கள் . இதை விளங்கிக்கொள்வதில்தான் பல சிக்கல்கள்  உண்டாகுகிறது.
   இந்த சிக்கலை உண்டாக்குவது சாதாரன ஆள் இல்லை .நன்கு படித்த ஆலீம்கள் என்ற பெயரெடுத்த ஆசான்கள்தான் . எங்கோ  ஒரிடத்தில்  சொல்லப்படுகின்ற செய்தியினை நம்பி தானும் கெட்டு அடுத்த ஆட்களையும் கெடுத்துமில்லாமல் நாம் சொல்லபோனால் அவரை விடவா நீ அதிகம் தெரிந்தவன் என்ற ஒற்றை வரியில் சொல்லி போகும் கொடூரம் என்ன சொல்வது.
  அந்த சிக்கலில்  இரெண்டை இதில் பார்க்கலாம் .
        ஒரு இடத்தில் கடமையான(பர்ஜ்) தொழகையானது நடக்கும் போது , வெளியிலிருந்து வருபவர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளவேண்டும். இது ஒருவர் சாதாரனமாக தொழும் தொழுகையின் பலனை விட கூட்டமாக (ஜமாத்)தொழுத 70 மடங்கு நன்மையை பெற்றுக்கொள்கிறார். ஒரு வேளை அவர்கள் கடைசி தொழுகையாக இருந்தாலும் ( அதாவது கடைசி ரக்காத் ) சரி. மீதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் .இதே முறையில்தான் வெள்ளி (ஜும்மா) தொழுகையும் .மற்றும் எல்லாவித தொழுகையின் முறையும் இதுதான்.
        சுன்னத் , நஃபில் போன்ற அதிகமான தொழுகை, தொழாவிட்டாலும் குற்றமில்லை .ஏன் தொழவில்லை என்று இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் .வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல பள்ளிக்காக இரெண்டு (ரக்காத்) தொழுதுக்கொள்ளுங்கள் . மற்றும் கடமையான தொழுகையில்லாத்தை வீட்டிலேயே தொழுதுக் கொள்ளுங்கள் . இதன் மூலம் உங்கள் வீடு கபர்ஸ்தான் (மயான பூமி) ஆகாமல் தப்பிக்கும் .
    ஆனால் நிறைய இடங்களில் என்னுடன் வரும் எத்தனையோ பேர் காலை தொழுகைக்காக பள்ளிவாசல் போகும் போது அங்கே இமாம் பஜர் தொழகை ஆரம்பிக்கும் போது நம்முடன் வந்தவர் ஒரு ஓரமாக ஒதுங்கி தனியாக இரெண்டு ரக்காத் சுன்னத்தொழகை தொழ ஆரம்பித்தார் . நான் கையை பிடித்து தரதரன்னு இழுத்துகிட்டே போய் கூட்டத்தில் விட்டேன். அவர் தொழுது முடித்தும் ரொம்பவே வருத்தப்பட்டார் .பஜர் தொழுகைக்கு முன்னால் இரெண்டு ரக்காத் தொழுகை ரொம்பவும் முக்கியம் .அது இல்லாமல் பஜர் தொழுகையே கிடையாதுன்னு  வாதிட்டார் . ஊரில் அவர் இமாம் இப்படித்தான் சொன்னாராம் .கடமையான பஜர் தொழுகையை விட சுன்னத் தொழுகை முக்கியமாம் .
     இதில் யாரை குறை சொல்வது .இவரது அறியாமையா..? இல்லை வழி கெடுத்த அந்த இமாமா..? படிப்பறிவு இல்லாத பாக்கிஸ்தானி களிடமும் , நமது தமிழர்களிடமும் தான் இது அதிகம் இருப்பது வேதனையின் உட்சக்கட்டம் . இதுப்போலவே  பள்ளிகளின் நட்ட நடுவே நின்று தொழுவது .  தனக்கு முன்னால் ஏதாவது ஒன்று தடுப்பு வைக்காம்ல் தொழுவது கூடாது . அப்படி தொழுபவர் குறுக்கே போவதின் தீங்கு  உங்களுக்கு தெரிந்திருந்தால் 40 வருடம் கூட பொருமையுடன் அங்கேயே நின்றிருப்பீகள் ..இதுவும் ஒரு ஹதீஸ்.
    ஒரு தொழுகையானது நமது எத்தனையோ  தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல்  செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!

12 comments:

 1. Riyas Says:

  Assalamu Alaikkum,,

  very useful post..

  Posted on October 16, 2011 at 7:11 PM  

  Lakshmi Says:

  ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!


  எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.

  Posted on October 16, 2011 at 7:33 PM  

  ஸாதிகா Says:

  சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!
  ///

  ரொம்ப ரொம்ப முக்கியம்.சகோ நல்லதொரு பதிவு.ஜஸகல்லாஹு கைரன்.

  //

  Posted on October 16, 2011 at 8:53 PM  

  ஜெய்லானி Says:

  @@@Riyas Says:--//

  Assalamu Alaikkum,,

  very useful post..//

  வாங்க ரியாஸ்... அலைக்கும் வ அஸ்ஸலாம் (வரஹ்)

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  Posted on October 16, 2011 at 9:22 PM  

  ஜெய்லானி Says:

  @@@Lakshmi Says:--//எல்லா பிரிவினருக்குமே கூட்டுப்பிரார்த்தனை செய்வது ரொம்ப முக்கியம்தான்.//

  வாங்க லஷ்மியம்மா வாங்க ...!!
  ஒருவர் சாதாரனமா பிரத்திப்பதை விட கூட்டாக பிராத்திப்பதுக்கு ஏகப்பட்ட பலன் இருக்கு . அந்த கூட்டத்தில் ஒருவர் தனக்காக கேட்டாலும் கூட அவரின் பிராத்தனை ஏற்றுக்கொள்ளப்படும் .இதுவும் ஒரு ஹதிஸ் (நபியின் பொன்மொழிகள்)தான் .
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  Posted on October 16, 2011 at 9:26 PM  

  ஜெய்லானி Says:

  @@@ஸாதிகா--//சுன்னத் தொழுபவர்கள் சற்று முன் கூட்டியே பள்ளிக்கு செல்வது செல்வது நல்லது.சுன்னத் தொழுகைக்காக நடந்து கொண்டிருக்கும் இமாம்ஜமாத்தை நிராகரிப்பது அறிவீனம். ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!! //

  வாங்க ஸாதிகாக்கா வாங்க .!! பெரும்பாலும் சுன்னத் தொழுகை தன் வீட்டிலேயே தொழுவதுதான் நல்லது.
  ஒரு முறை ரஸுலுல்லாஹ் (ஸல்) சொன்னார்கள்.நான் சுன்னத் தொழுகையை பள்ளிவாசலிலேயே தொடர்ந்து தொழுதால் மக்கள் இதையும் ஒரு கடமையாகவே ஆக்கிவிடுவார்கள் . இதனால் சிலநேரம் பள்ளியில் தொழுவேன் . சில நேரம் வீட்டிலே தொழுதிடுவேன் .

  ஒரு சுன்னத் தொழுகைக்காக கடமையானதை விடும் நஷ்டம் மிகப்பெரியது :-(

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  Posted on October 16, 2011 at 9:34 PM  

  asiya omar Says:

  //ஒரு தொழுகையானது நமது எத்தனையோ தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல் செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!//

  ஆமாம் சகோ.நல்ல பகிர்வு..

  Posted on October 16, 2011 at 10:20 PM  

  மாய உலகம் Says:

  பகிர்வுக்கு நன்றி சகோ!

  Posted on October 17, 2011 at 3:24 AM  

  அம்பாளடியாள் Says:

  என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....

  Posted on October 25, 2011 at 12:16 AM  

  Jaleela Kamal Says:

  அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகை பற்றி சிறப்பாக எழுதி இருகீங்க , பள்ளி வாசலில் சென்றது 2 ரக் அத் முன்பு என்க்கு தெரியாது, சமீபத்த்தில் தெரிந்ததில் இருந்து எப்பபோனாலும் தொழுது கொள்வது.

  Posted on November 4, 2011 at 10:52 AM  

  சிநேகிதி Says:

  இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  Posted on November 7, 2011 at 2:41 PM  

  PUTHIYATHENRAL Says:

  தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

  Posted on December 2, 2011 at 2:04 AM  

Post a Comment