நரக நெருப்பு , ஒரு பார்வை        என்னுடைய  மாற்றுமத நண்பர்  ஒருவர் மிகவும் கெட்டிக்காரர். லாஜிகலா  கேள்விக்கேட்டு  மடக்குவதில்  வல்லவர். மற்ற சில இஸ்லாமிய நண்பர்கள் இவரை  கண்டாலே  கொஞ்சம்  பயம் .ஏதாவது எசகு பிசகா கேள்வி கேட்டா என்ன செய்வது என்று  புரியாமல்  என்னை கைய காட்டி விட்டு  ஓடிடுவாங்க .( ஓவர்  பில்டப் போதும் , இனி  அவர் கேட்கும் கேள்விகளில்  ஒரு சில இந்த பிளாகில்  வரலாம். ) இனி கேள்வி J
   (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.        திருக்குரான் 55:14
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.  55:15.
நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன்என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும் -- 11:119
அவன் தங்குமிடம்ஹாவியாதான். (101:9)
இன்னும் (‘ஹாவியா’) என்ன என்று உமக்கு அறிவித்தது எது? (101:10)

அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும். (101:11)
                     களி மண்ணிணால் உருவான மனிதனை  நெருப்பில்  போடுவது வரை சரிதான் .ஆனால் நெருப்பினால்  உருவான ஜின் வர்கத்தை  திரும்பவும் நெருப்பில்  போடுவதால் ஏதாவது  மாற்றம் , வேதனை  இருக்குமா..? இரெண்டு  வர்கமும் தண்டனை ஒரே மாதிரியாக  இருக்கிறதே  இது சரிதானா என்று கேட்டார் . வழக்கம் போல மற்ற நண்பர்களும்  பதிலை எதிர்பார்த்து  ஆவலுடன் இருந்தார்கள்.
      நான் ஒன்றும் சொல்லாமல்  பக்கத்தில்  கிடந்த ஒரு கல்லை ( ????....!!!!!  ) எடுத்து வேகமாக  அவர் காலில்  வீசி எறிந்தேன் .கல் ( !!!! )  காலில்  பட்டு பவுடர்  போல விழுந்தது . அந்த மண் இறுகிப்போய் கட்டியாக இருந்ததே  காரணம்.  பயபுள்ள  வலியில்  கொஞ்ச நேரம்  பேசவே  இல்லை. இதுவே  கல்லாக இருந்திருந்தால்  கால் எலும்பு  இந்நேரம்  உடைந்திருக்கும் J.
     பதில் :  மண்ணால்  செய்த உன்னை மண்கட்டியால் அடித்ததற்கே  இப்படி  வலிக்கிறதே .அதேப்போல  இறைவன்  உருவாக்கிய அதீத நரக நெருப்பு இன்னொரு நெருப்பை வினாடியில் சுட்டுப்பொசுக்கி விடாதா . இவ்வளவு  பெரிய பேரண்டத்தை  படைத்து காத்து வரும் இறைவனுக்கு  இது ஒரு அர்ப்ப விஷயம்தானே  என்று சொன்னேன் . நரகத்தை இந்த உலகத்து  நெருப்பை போன்று என்னுவதால்  வரும் குழப்பமே  காரணம் .என்று சொல்லி விட்டு போனார் .
    ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் கேட்கும் பிராத்தனையில் இறைவனே  கேட்க சொன்னது .ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” 2:201