பஜர் (அதிகாலை) தொழுகை


    இஸ்லாமிய உலகத்திலே ரஸூல் (ஸல்) அவர்களுக்கு , அவரின் சொல் செயல் அனைத்திற்கும் பெரு மதிப்பு இருக்கிறது . இது உலக முடிவு நாள் வரையிலும் இருக்கும் . அவர்கள் இறை செய்தியை முழுமையாக சொல்லிவிட்டே  சென்றுள்ளார்கள் . இதை விளங்கிக்கொள்வதில்தான் பல சிக்கல்கள்  உண்டாகுகிறது.
   இந்த சிக்கலை உண்டாக்குவது சாதாரன ஆள் இல்லை .நன்கு படித்த ஆலீம்கள் என்ற பெயரெடுத்த ஆசான்கள்தான் . எங்கோ  ஒரிடத்தில்  சொல்லப்படுகின்ற செய்தியினை நம்பி தானும் கெட்டு அடுத்த ஆட்களையும் கெடுத்துமில்லாமல் நாம் சொல்லபோனால் அவரை விடவா நீ அதிகம் தெரிந்தவன் என்ற ஒற்றை வரியில் சொல்லி போகும் கொடூரம் என்ன சொல்வது.
  அந்த சிக்கலில்  இரெண்டை இதில் பார்க்கலாம் .
        ஒரு இடத்தில் கடமையான(பர்ஜ்) தொழகையானது நடக்கும் போது , வெளியிலிருந்து வருபவர் அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளவேண்டும். இது ஒருவர் சாதாரனமாக தொழும் தொழுகையின் பலனை விட கூட்டமாக (ஜமாத்)தொழுத 70 மடங்கு நன்மையை பெற்றுக்கொள்கிறார். ஒரு வேளை அவர்கள் கடைசி தொழுகையாக இருந்தாலும் ( அதாவது கடைசி ரக்காத் ) சரி. மீதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் .இதே முறையில்தான் வெள்ளி (ஜும்மா) தொழுகையும் .மற்றும் எல்லாவித தொழுகையின் முறையும் இதுதான்.
        சுன்னத் , நஃபில் போன்ற அதிகமான தொழுகை, தொழாவிட்டாலும் குற்றமில்லை .ஏன் தொழவில்லை என்று இறைவன் குற்றம் பிடிக்க மாட்டான் .வீட்டிற்கு வந்த விருந்தாளியை வரவேற்பது போல பள்ளிக்காக இரெண்டு (ரக்காத்) தொழுதுக்கொள்ளுங்கள் . மற்றும் கடமையான தொழுகையில்லாத்தை வீட்டிலேயே தொழுதுக் கொள்ளுங்கள் . இதன் மூலம் உங்கள் வீடு கபர்ஸ்தான் (மயான பூமி) ஆகாமல் தப்பிக்கும் .
    ஆனால் நிறைய இடங்களில் என்னுடன் வரும் எத்தனையோ பேர் காலை தொழுகைக்காக பள்ளிவாசல் போகும் போது அங்கே இமாம் பஜர் தொழகை ஆரம்பிக்கும் போது நம்முடன் வந்தவர் ஒரு ஓரமாக ஒதுங்கி தனியாக இரெண்டு ரக்காத் சுன்னத்தொழகை தொழ ஆரம்பித்தார் . நான் கையை பிடித்து தரதரன்னு இழுத்துகிட்டே போய் கூட்டத்தில் விட்டேன். அவர் தொழுது முடித்தும் ரொம்பவே வருத்தப்பட்டார் .பஜர் தொழுகைக்கு முன்னால் இரெண்டு ரக்காத் தொழுகை ரொம்பவும் முக்கியம் .அது இல்லாமல் பஜர் தொழுகையே கிடையாதுன்னு  வாதிட்டார் . ஊரில் அவர் இமாம் இப்படித்தான் சொன்னாராம் .கடமையான பஜர் தொழுகையை விட சுன்னத் தொழுகை முக்கியமாம் .
     இதில் யாரை குறை சொல்வது .இவரது அறியாமையா..? இல்லை வழி கெடுத்த அந்த இமாமா..? படிப்பறிவு இல்லாத பாக்கிஸ்தானி களிடமும் , நமது தமிழர்களிடமும் தான் இது அதிகம் இருப்பது வேதனையின் உட்சக்கட்டம் . இதுப்போலவே  பள்ளிகளின் நட்ட நடுவே நின்று தொழுவது .  தனக்கு முன்னால் ஏதாவது ஒன்று தடுப்பு வைக்காம்ல் தொழுவது கூடாது . அப்படி தொழுபவர் குறுக்கே போவதின் தீங்கு  உங்களுக்கு தெரிந்திருந்தால் 40 வருடம் கூட பொருமையுடன் அங்கேயே நின்றிருப்பீகள் ..இதுவும் ஒரு ஹதீஸ்.
    ஒரு தொழுகையானது நமது எத்தனையோ  தீமைகளை குறைக்கிறது. மறுமையில் நமக்காக பரிந்து பேசுகிரது . அதை குறையில்லாமல்  செய்வது ரொம்பவும் முக்கியம்தானே...!!!