ஒரே செயல் , வித்தியாசம்

             நம்மில்  பலர் சொல்வது ,  அடிக்கடி சொல்லும் வார்த்தை ,யார்தான் தவறு செய்ய வில்லை  , மனிதன் தானே தவறு செய்ய முடியும் அதனால் விட்டுத்தள்ளுங்கள் என்று , எந்த தவற்றையும்  அலச்சியமாக விட்டு விடுகிறோம் . செய்யும் தவறுகள் நமக்கு ரொமப சின்னதாக கடுகுப் போல  தெரிகிறது.. ஆனால்  அதே தவறை வேறு யாராவது செய்தால் நாம் விடுவது  இல்லை.. அது நமக்கு மலைப்போல தெரிகிறது.

                 தவறுகள் நாம் மட்டும் செய்வது இல்லை .ஜின் இனமும்தான் செய்கிறது..பகுத்தறிவு உள்ள  இந்த  இரெண்டு இனமும்தான் சொர்கமோ நரகமோ  போகக்கூடியது...இப்லீஷ, சைத்தான்  என்று சொல்லக்கூடிய அஸாஜீல்   ஜின் இனத்தை சேர்த்தவனே..!!

                இறைவன் படைத்த முதல் மனிதரான ஆதம்  (அலை ) அவர்களை  மலக்குகள் எல்லாரையும் அல்லாஹ் ஸஜ்தா செய்ய உத்தரவிட்டான் . அனைத்து மலக்குகளும் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸ்ஜ்தா செய்ய சைத்தான் நான் நெருப்பினால் படைக்க பட்டவன் ,  கேவலம் மண்ணால் படைக்கப்பட்டதற்கு ஸஜ்தா செய்வதா முடியவே முடியாது . என்று மறுத்து விட்டான்
                    தனது பதவி மற்றும் ஆணவம்  கண்களை மறைத்து விட்டது. தான் செய்வது தவறு என்றும் புரிந்துக்கொள்ளவில்லை  அதனால்  இறைவனால் அங்கிருந்து துரத்தப்பட்டு  உலக முடிவு நாள் வரை அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் மற்றும் நமது சாபமும் அவன் மீது இருக்கிறது. இதுவுமில்லாமல் நம்மையும் வழிக்கெடுப்பதாக அதே அல்லாஹ் மீது சபதமும் பெற்று வந்துள்ளான் . இன்றும்  நமது எதிரியாக இருக்கிறான்
                 
                     அதே நேரம்  ஆதம் (அலை ) அவர்களும் ஒரு தவறு செய்தார்கள்.. இறைவன் விலக்கி இருந்த கனியை  சைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டது. இதனால் சுவர்கத்தை விட்டு வெளியேறியது.  ஆனால்  அவர்கள்  தனது தவறை நியாயப்படுத்த வில்லை..  மாறாக தன்னையே நொந்துக்கொண்டு   அல்லாஹ் ரஹ்மானாகவும் ( பேரருளாளன் )  ரஹீமாகவும்  (பேரன்பு கொண்டவன் ) இருக்கிறான் என  புகழ்ந்து உடனே மன்னிப்பு வேண்டி இறைஞ்சினார்கள்
              
                   மனம் உருகி , தன்னைத் தாழ்த்திக் கொண்டுதவ்பா செய்தார்கள். அல்லாஹ் மனமிரங்கி  அவர்களின் தவ்பா ( பாவ மன்னிப்பு ) வை ஏற்று
 கொண்டதுடன் . ஆதம் அவர்களுக்கும் சில வார்த்தைகளை க்ற்றுத்தந்து  அதன் மூலம் துவா செய்ய  வைத்து மன்னித்தான்   (  அல் பக்ரா-:  36,37 ) 

         இதில்  இரெண்டு பேருமே ஒரே வித பாவமே செய்தார்கள் . அது இறை கட்டளையை மீறியது..  ஒருவருக்கு யுகம் முடியும் வரையில்  சாபம், கேவலப்படுத்துதல் , அதன் பிறகும் மோசமான தண்டனை ..அந்த தண்டனையும் முன்பே அறிவிக்க பட்ட மோசமான நரகத்தண்டனை.   ஆனால் மற்றவர்க்கு அழகிய  பாவமன்னிப்பு  , துவா செய்ய செல்லும் வார்த்தைகள், இனி வரும் சந்ததியையும்  காக்கும்     விதமான தூதர்களை பற்றீயும் நற்செய்தி, அதனால் நரகத்தை விட்டு தப்பும் வழிமுறைகள்.. ஏன் இப்படி ஒரே செயலுக்கு இரெண்டு விதமான எதிர் வினைகள்..

        ஒருவர் தனது செயலுக்கு வருந்தவுமில்லை, நியாயப்படுத்தவே முயற்சித்தார். அதுவும் தனது உயர்ந்த பதவி ஆனவமும் ஒரு புறம்  ( நெருப்பால் படைக்க பட்டதும் , இன்னும் ஒரு பகுதியினருக்கு தலைவராக இருந்த தால் )தற்பெருமையும் ,தான் பேசுவதே சரி என்று என்ன வைத்தது. ஆனால் மற்றவரோ  எந்த வித சாக்கு போக்கோ  சொல்லவில்லை.தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.. பாவ மன்னிப்பும் வேண்டினார். அதனால் அவருக்கு அழகிய மன்னிப்பும்  கிடத்தது.

உலகில் நிறைய குற்றம் நடப்பதுக்கு காரணம் யார் நம்மை பார்க்கிறார்கள், யார் நம்மை கேட்கப்போகிறார்கள் என்ற நினைவே..! கயிற்றில கட்டப்பட்டு விட்ட ஆடு போல நாம் என்பதை மறக்கக்கூடாது. நமது குற்றங்களோ செயல்களோ  ஒரு அளவு வரை தான், இறைவனின்  பிடி இறுகும் போது அவனை காப்பாற்ற  உலகில் ஒரு வரையும் பர்க்க முடியாது.

         அதனால் தவறுகளை தவறுகளாக  ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதிலும் தான் மனிதனின் சிறப்பே இருக்கிறது கேவலமாக சாக்கு ப்போக்கு சொல்வதை விட்டொளிப்போம்.. 

ஆடை

              உலகில் மனித இனத்திற்குதான் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை  இறைவன்  கொடுத்துள்ளான்.  அதே நேரம் அவன் எப்படியாவது முட்டி மோதி ,தேடி வாழ்ந்து விட்டு வரட்டும் என்று எண்ணாமல்  அப்போதைக்கப்போது  தேவைக்கு ஏற்ப தூதர்களையும்  நம்மிடையே அனுப்பி , தேவைப்படும் போது சட்ட திட்டங்களையும்    அனுப்பினான்.
             மக்கள் தொகையும் அதிகமானதும் , மனிதன் தானே எல்லாம் தெரிந்தவன் என்று கெட்டு அலையாமல் நேர்வழியை நேர்வழியாகவே அனுப்பி வைத்தான் . அதில் முக்கியமான சட்டங்களாகவே வைத்தது  உடை, அலங்காரம் பற்றியதும் ஒன்னுதான் .  தன்னுடைய அல்குர் ஆனில் அடிக்கடி  ஒரு வார்த்தையை உபயோகித்துள்ளான் .
               அது நீங்கள்  சிந்தீப்பீர்களாக ,நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா..? , சிந்திக்கும்  மக்களுக்கு இதில் அத்தாட்சி உள்ளது , இப்படி நம்மை யோசிக்க வைக்க என்ன காரணம் . மனிதன் தவறு இழைக்காமல்  நேர்வழி  வாழ தனது ஆறாவது  அறிவை உபயோகித்து பார்க்கவே.. நன்மை தீமை எது என்று பிரித்து பார்க்கவே அதோடு இறைவனின் கருனையும் கூடவே வருமாயின் அவன் எவ்வளவு பாக்கியசாலி.
              எந்த ஒரு மனிதனும் தன் தங்கையை , அக்காவை , மனைவியை ,தாயை நாலு பேர் கெட்ட கண்களோடு பார்ப்பதை விரும்ப மாட்டான். ஏன் ? , அப்படி விரும்பினால் அவன் மனித இனமே இல்லை. அதே போல ஒரு குடும்ப தலைவன் தன் மகளை, மனைவியை நாலு பேர் முன்னால் அறை குறை ஆடையோடு , உடல் உறுப்புக்கள் வெளியே தெரிகிற மாதிரி பார்க்க அனுமதிக்க மாட்டான் . ஏன் ?

        அப்போது மட்டும் அவனுக்கு தன்மானம் , வீரம் எல்லாம்  வருகிறது .அதே  வேறு யாராவது  போனால் இன்னும் இலவச தரிசனம் கிடைக்காதான்னு  பார்க்கிறான் .கேட்டால் எல்லாம் நாகரீகம் வளர்ந்து விட்டது  . இந்த வயதில் இப்படிதான் , அப்புரம் வேலை , கல்யாணம் என்று குடும்பசுமை வந்து விட்டால் இதெல்லாம் அனுபவிக்க முடியாது என்று ஒரு சப்பை கட்டு கட்டுகிறான் .
         
               இஸ்லாமில்,  தன் தாயை பார்க்கக்கூட  அவளுடைய (அறை கதைவை தட்டி விட்டு  ) அனுமதியின்று பார்க்க கூடாது  என்று சொல்கிரது ஒரு நாளில் மூன்று வித நேரங்களில் தனித்திருக்கும் நேரம் , தொழுகைக்கான நேரம் , இப்படி.., மிக நெருங்கிய   சொந்தங்களை தவிர உறவு முறைகளில் ஆண்கள் யாரையும்  திரை இன்றி பார்க்க க்கூடாது  . பேசக்கூடாது .ஏழு வயது வந்து விட்டால் தன் பிள்ளைகளை  தனியே படுக்க வைக்க பழக்கவேண்டும் .
               ஏன் ?  எவன் மனதில் நோய் இருக்கிறதோ அவன் காதல் கொள்வான் ( ஹதிஸ் )..!!அதனை தொடர்ந்து  தேவையில்லாத பிரச்சனைகள் வரும் .ஒரு விஷச்செடி துளிர் விடும் போது அதை வெறும் கையால் கிள்ளி எறிவது எளிதா இல்லை மரமாக வளர்ந்ததும்   நாலு ஆள் சேர்ந்து வெட்டி , சாய்ப்பது எளிதா..?
                இப்படியாக குடும்ப சொந்த பந்தங்களிளேயே  நேரிடையாக பார்கக் க்கூடாது , பேசக்கூடாதுன்னு வைத்திருப்பது  எத்தனையோ அனாச்சாரங்களை ஆரம்பத்திலேயே  இஸ்லாம் நீக்கி தடுத்து விட்டது.
                பெண்ணின் அலங்காரம் யாருக்காக ஊரில் வருவோர் போவோர் பார்க்கவா..? அது என்ன கடை சரக்கா. அழகாக்கி கொள்வது என்பது வேறு அழகாக பிறர் பார்க்க காட்ட நினைப்பது வேறு. நடைமுறையில் ஒரு பெண் உடலை மறைத்துக் கொண்டு ஒரு சால்வை மாதிரி போர்த்திக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு  அவருக்கும் தனது வேலையில் கவனம் திரும்பி விடும் . இதுவே கண் கவரும் வகையில்,போனால் நினைவு அவள் போகும் வரை, கண்ணைவிட்டு மறைந்த பின்னும் தேவை இல்லாத  எண்ணங்களை நினைக்கவே தோனும்  .
        பிறகு தன் மனைவி மக்களுடன் ஒப்பிட்டு பார்க்க தோனும் .வீட்டில் நீ அவளை மாதிரி புடவை கட்டுவது இல்லை , அவளை மாதிரி மேக்கப் போடுவது இல்லை போன்ற ஒப்பீட்டு மனப்பான்மையை  கிளப்பிவிட்டு கடைசியில் குடும்ப ஒற்றுமைக்கே வேட்டு வைத்து விடும்.  ஆள் பாதி ஆடைப்பாதி  , ஆனால் பாதி பிரச்சனை ஆடையால்தானே வருகிறது
      நான் எப்படி வேண்டுமானாலும் வருவேன் .உன் கண்னை மூடிக்கொள் என்று சொல்வது அந்த நிமிடத்திற்கு வேண்டுமானாலும் நமது வாயை அடைக்க சரியாக இருக்கும் . எதுவும் ....அடுத்த வீட்டில் நடக்கும் வரை அது நமக்கு ஒரு செய்தி மட்டுமே ..ஆனால் அதுவே நமது வீட்டில் நடக்கும் போது...........................?..!! .
       முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சிலர் உடை விஷயத்தில் மெத்தனமாக நடந்துக்கொள்வதனால் நஷ்டம் யாருக்கு.?   . இறை கட்டளை ஒன்றை காற்றில் பறக்க விட்டதுக்கு தண்டனையும் ,  அவர் பெற்றோருக்கும் சேர்த்துதானே கிடைக்கும் .