ஒரே செயல் , வித்தியாசம்

             நம்மில்  பலர் சொல்வது ,  அடிக்கடி சொல்லும் வார்த்தை ,யார்தான் தவறு செய்ய வில்லை  , மனிதன் தானே தவறு செய்ய முடியும் அதனால் விட்டுத்தள்ளுங்கள் என்று , எந்த தவற்றையும்  அலச்சியமாக விட்டு விடுகிறோம் . செய்யும் தவறுகள் நமக்கு ரொமப சின்னதாக கடுகுப் போல  தெரிகிறது.. ஆனால்  அதே தவறை வேறு யாராவது செய்தால் நாம் விடுவது  இல்லை.. அது நமக்கு மலைப்போல தெரிகிறது.

                 தவறுகள் நாம் மட்டும் செய்வது இல்லை .ஜின் இனமும்தான் செய்கிறது..பகுத்தறிவு உள்ள  இந்த  இரெண்டு இனமும்தான் சொர்கமோ நரகமோ  போகக்கூடியது...இப்லீஷ, சைத்தான்  என்று சொல்லக்கூடிய அஸாஜீல்   ஜின் இனத்தை சேர்த்தவனே..!!

                இறைவன் படைத்த முதல் மனிதரான ஆதம்  (அலை ) அவர்களை  மலக்குகள் எல்லாரையும் அல்லாஹ் ஸஜ்தா செய்ய உத்தரவிட்டான் . அனைத்து மலக்குகளும் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸ்ஜ்தா செய்ய சைத்தான் நான் நெருப்பினால் படைக்க பட்டவன் ,  கேவலம் மண்ணால் படைக்கப்பட்டதற்கு ஸஜ்தா செய்வதா முடியவே முடியாது . என்று மறுத்து விட்டான்
                    தனது பதவி மற்றும் ஆணவம்  கண்களை மறைத்து விட்டது. தான் செய்வது தவறு என்றும் புரிந்துக்கொள்ளவில்லை  அதனால்  இறைவனால் அங்கிருந்து துரத்தப்பட்டு  உலக முடிவு நாள் வரை அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் மற்றும் நமது சாபமும் அவன் மீது இருக்கிறது. இதுவுமில்லாமல் நம்மையும் வழிக்கெடுப்பதாக அதே அல்லாஹ் மீது சபதமும் பெற்று வந்துள்ளான் . இன்றும்  நமது எதிரியாக இருக்கிறான்
                 
                     அதே நேரம்  ஆதம் (அலை ) அவர்களும் ஒரு தவறு செய்தார்கள்.. இறைவன் விலக்கி இருந்த கனியை  சைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டது. இதனால் சுவர்கத்தை விட்டு வெளியேறியது.  ஆனால்  அவர்கள்  தனது தவறை நியாயப்படுத்த வில்லை..  மாறாக தன்னையே நொந்துக்கொண்டு   அல்லாஹ் ரஹ்மானாகவும் ( பேரருளாளன் )  ரஹீமாகவும்  (பேரன்பு கொண்டவன் ) இருக்கிறான் என  புகழ்ந்து உடனே மன்னிப்பு வேண்டி இறைஞ்சினார்கள்
              
                   மனம் உருகி , தன்னைத் தாழ்த்திக் கொண்டுதவ்பா செய்தார்கள். அல்லாஹ் மனமிரங்கி  அவர்களின் தவ்பா ( பாவ மன்னிப்பு ) வை ஏற்று
 கொண்டதுடன் . ஆதம் அவர்களுக்கும் சில வார்த்தைகளை க்ற்றுத்தந்து  அதன் மூலம் துவா செய்ய  வைத்து மன்னித்தான்   (  அல் பக்ரா-:  36,37 ) 

         இதில்  இரெண்டு பேருமே ஒரே வித பாவமே செய்தார்கள் . அது இறை கட்டளையை மீறியது..  ஒருவருக்கு யுகம் முடியும் வரையில்  சாபம், கேவலப்படுத்துதல் , அதன் பிறகும் மோசமான தண்டனை ..அந்த தண்டனையும் முன்பே அறிவிக்க பட்ட மோசமான நரகத்தண்டனை.   ஆனால் மற்றவர்க்கு அழகிய  பாவமன்னிப்பு  , துவா செய்ய செல்லும் வார்த்தைகள், இனி வரும் சந்ததியையும்  காக்கும்     விதமான தூதர்களை பற்றீயும் நற்செய்தி, அதனால் நரகத்தை விட்டு தப்பும் வழிமுறைகள்.. ஏன் இப்படி ஒரே செயலுக்கு இரெண்டு விதமான எதிர் வினைகள்..

        ஒருவர் தனது செயலுக்கு வருந்தவுமில்லை, நியாயப்படுத்தவே முயற்சித்தார். அதுவும் தனது உயர்ந்த பதவி ஆனவமும் ஒரு புறம்  ( நெருப்பால் படைக்க பட்டதும் , இன்னும் ஒரு பகுதியினருக்கு தலைவராக இருந்த தால் )தற்பெருமையும் ,தான் பேசுவதே சரி என்று என்ன வைத்தது. ஆனால் மற்றவரோ  எந்த வித சாக்கு போக்கோ  சொல்லவில்லை.தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.. பாவ மன்னிப்பும் வேண்டினார். அதனால் அவருக்கு அழகிய மன்னிப்பும்  கிடத்தது.

உலகில் நிறைய குற்றம் நடப்பதுக்கு காரணம் யார் நம்மை பார்க்கிறார்கள், யார் நம்மை கேட்கப்போகிறார்கள் என்ற நினைவே..! கயிற்றில கட்டப்பட்டு விட்ட ஆடு போல நாம் என்பதை மறக்கக்கூடாது. நமது குற்றங்களோ செயல்களோ  ஒரு அளவு வரை தான், இறைவனின்  பிடி இறுகும் போது அவனை காப்பாற்ற  உலகில் ஒரு வரையும் பர்க்க முடியாது.

         அதனால் தவறுகளை தவறுகளாக  ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதிலும் தான் மனிதனின் சிறப்பே இருக்கிறது கேவலமாக சாக்கு ப்போக்கு சொல்வதை விட்டொளிப்போம்.. 

6 comments:

 1. ஸாதிகா Says:

  ஜெய்லானி மிக அற்புதமான உவமானத்துடன் விளக்கி இருந்தீர்கள்.நீங்கள் குறிப்பிட்டுள்ள வரலாற்று சம்பவம் நான் அடிக்கடி படித்ததாக இருந்தாலும் உங்கள் நடையில் படிக்கும் பொழுது சுவாரஸ்யமாக உள்ளது.//கயிற்றில கட்டப்பட்டு விட்ட ஆடு போல நாம் என்பதை மறக்கக்கூடாது.
  அதனால் தவறுகளை தவறுகளாக ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதிலும் தான் மனிதனின் சிறப்பே இருக்கிறது கேவலமாக சாக்கு ப்போக்கு சொல்வதை விட்டொளிப்போம்..
  // அழகிய வரிகள்.ஜஸகல்லாஹு ஹைரன்.

  Posted on November 19, 2010 at 8:00 AM  

  அன்புடன் மலிக்கா Says:

  நிதர்சனமான உண்மைகள் அண்ணாத்தே!
  மனிதன் தவறிழைக்கூடியவனே ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்வதில்தான் குற்றமிழைக்கிறான் தவறென அறிந்தும் தவறுவது நியாமைல்லையே.

  மிகத்தெளிவான அருமையா விளக்கங்கள் மாசா அல்லாஹ்
  இறைவன் அனைவருக்கும் தவ்ஃபீக்கை தந்தருள்வானாக..

  Posted on November 23, 2010 at 9:01 AM  

  மாணவன் Says:

  அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்..

  நன்றி

  Posted on November 26, 2010 at 2:30 PM  

  Jaleela Kamal Says:

  //அதனால் தவறுகளை தவறுகளாக ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதிலும் தான் மனிதனின் சிறப்பே இருக்கிறது கேவலமாக சாக்கு ப்போக்கு சொல்வதை விட்டொளிப்போம்/

  மிகச்சிறப்பான பதிவு.

  Posted on December 1, 2010 at 9:23 PM  

  அன்னு Says:

  என்ன பாய், இதன் பின் எதுவும் எழுதலை?

  Posted on February 10, 2011 at 11:41 PM  

  ஜெய்லானி Says:

  @@@அன்னு--//என்ன பாய், இதன் பின் எதுவும் எழுதலை? //

  பிளாக் பக்கமே வராததால இங்கேயும் நின்னுடுச்சி ..இனிமே இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வரும் ...!!
  இன்னும் இரெண்டு சிங்கங்கள் இணைந்திருக்கு முழுப்பாய்ச்சலோடு எதிர் பார்க்கலாம் :-)

  Posted on February 11, 2011 at 10:44 PM  

Post a Comment