ஆடை

              உலகில் மனித இனத்திற்குதான் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை  இறைவன்  கொடுத்துள்ளான்.  அதே நேரம் அவன் எப்படியாவது முட்டி மோதி ,தேடி வாழ்ந்து விட்டு வரட்டும் என்று எண்ணாமல்  அப்போதைக்கப்போது  தேவைக்கு ஏற்ப தூதர்களையும்  நம்மிடையே அனுப்பி , தேவைப்படும் போது சட்ட திட்டங்களையும்    அனுப்பினான்.
             மக்கள் தொகையும் அதிகமானதும் , மனிதன் தானே எல்லாம் தெரிந்தவன் என்று கெட்டு அலையாமல் நேர்வழியை நேர்வழியாகவே அனுப்பி வைத்தான் . அதில் முக்கியமான சட்டங்களாகவே வைத்தது  உடை, அலங்காரம் பற்றியதும் ஒன்னுதான் .  தன்னுடைய அல்குர் ஆனில் அடிக்கடி  ஒரு வார்த்தையை உபயோகித்துள்ளான் .
               அது நீங்கள்  சிந்தீப்பீர்களாக ,நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா..? , சிந்திக்கும்  மக்களுக்கு இதில் அத்தாட்சி உள்ளது , இப்படி நம்மை யோசிக்க வைக்க என்ன காரணம் . மனிதன் தவறு இழைக்காமல்  நேர்வழி  வாழ தனது ஆறாவது  அறிவை உபயோகித்து பார்க்கவே.. நன்மை தீமை எது என்று பிரித்து பார்க்கவே அதோடு இறைவனின் கருனையும் கூடவே வருமாயின் அவன் எவ்வளவு பாக்கியசாலி.
              எந்த ஒரு மனிதனும் தன் தங்கையை , அக்காவை , மனைவியை ,தாயை நாலு பேர் கெட்ட கண்களோடு பார்ப்பதை விரும்ப மாட்டான். ஏன் ? , அப்படி விரும்பினால் அவன் மனித இனமே இல்லை. அதே போல ஒரு குடும்ப தலைவன் தன் மகளை, மனைவியை நாலு பேர் முன்னால் அறை குறை ஆடையோடு , உடல் உறுப்புக்கள் வெளியே தெரிகிற மாதிரி பார்க்க அனுமதிக்க மாட்டான் . ஏன் ?

        அப்போது மட்டும் அவனுக்கு தன்மானம் , வீரம் எல்லாம்  வருகிறது .அதே  வேறு யாராவது  போனால் இன்னும் இலவச தரிசனம் கிடைக்காதான்னு  பார்க்கிறான் .கேட்டால் எல்லாம் நாகரீகம் வளர்ந்து விட்டது  . இந்த வயதில் இப்படிதான் , அப்புரம் வேலை , கல்யாணம் என்று குடும்பசுமை வந்து விட்டால் இதெல்லாம் அனுபவிக்க முடியாது என்று ஒரு சப்பை கட்டு கட்டுகிறான் .
         
               இஸ்லாமில்,  தன் தாயை பார்க்கக்கூட  அவளுடைய (அறை கதைவை தட்டி விட்டு  ) அனுமதியின்று பார்க்க கூடாது  என்று சொல்கிரது ஒரு நாளில் மூன்று வித நேரங்களில் தனித்திருக்கும் நேரம் , தொழுகைக்கான நேரம் , இப்படி.., மிக நெருங்கிய   சொந்தங்களை தவிர உறவு முறைகளில் ஆண்கள் யாரையும்  திரை இன்றி பார்க்க க்கூடாது  . பேசக்கூடாது .ஏழு வயது வந்து விட்டால் தன் பிள்ளைகளை  தனியே படுக்க வைக்க பழக்கவேண்டும் .
               ஏன் ?  எவன் மனதில் நோய் இருக்கிறதோ அவன் காதல் கொள்வான் ( ஹதிஸ் )..!!அதனை தொடர்ந்து  தேவையில்லாத பிரச்சனைகள் வரும் .ஒரு விஷச்செடி துளிர் விடும் போது அதை வெறும் கையால் கிள்ளி எறிவது எளிதா இல்லை மரமாக வளர்ந்ததும்   நாலு ஆள் சேர்ந்து வெட்டி , சாய்ப்பது எளிதா..?
                இப்படியாக குடும்ப சொந்த பந்தங்களிளேயே  நேரிடையாக பார்கக் க்கூடாது , பேசக்கூடாதுன்னு வைத்திருப்பது  எத்தனையோ அனாச்சாரங்களை ஆரம்பத்திலேயே  இஸ்லாம் நீக்கி தடுத்து விட்டது.
                பெண்ணின் அலங்காரம் யாருக்காக ஊரில் வருவோர் போவோர் பார்க்கவா..? அது என்ன கடை சரக்கா. அழகாக்கி கொள்வது என்பது வேறு அழகாக பிறர் பார்க்க காட்ட நினைப்பது வேறு. நடைமுறையில் ஒரு பெண் உடலை மறைத்துக் கொண்டு ஒரு சால்வை மாதிரி போர்த்திக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு  அவருக்கும் தனது வேலையில் கவனம் திரும்பி விடும் . இதுவே கண் கவரும் வகையில்,போனால் நினைவு அவள் போகும் வரை, கண்ணைவிட்டு மறைந்த பின்னும் தேவை இல்லாத  எண்ணங்களை நினைக்கவே தோனும்  .
        பிறகு தன் மனைவி மக்களுடன் ஒப்பிட்டு பார்க்க தோனும் .வீட்டில் நீ அவளை மாதிரி புடவை கட்டுவது இல்லை , அவளை மாதிரி மேக்கப் போடுவது இல்லை போன்ற ஒப்பீட்டு மனப்பான்மையை  கிளப்பிவிட்டு கடைசியில் குடும்ப ஒற்றுமைக்கே வேட்டு வைத்து விடும்.  ஆள் பாதி ஆடைப்பாதி  , ஆனால் பாதி பிரச்சனை ஆடையால்தானே வருகிறது
      நான் எப்படி வேண்டுமானாலும் வருவேன் .உன் கண்னை மூடிக்கொள் என்று சொல்வது அந்த நிமிடத்திற்கு வேண்டுமானாலும் நமது வாயை அடைக்க சரியாக இருக்கும் . எதுவும் ....அடுத்த வீட்டில் நடக்கும் வரை அது நமக்கு ஒரு செய்தி மட்டுமே ..ஆனால் அதுவே நமது வீட்டில் நடக்கும் போது...........................?..!! .
       முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சிலர் உடை விஷயத்தில் மெத்தனமாக நடந்துக்கொள்வதனால் நஷ்டம் யாருக்கு.?   . இறை கட்டளை ஒன்றை காற்றில் பறக்க விட்டதுக்கு தண்டனையும் ,  அவர் பெற்றோருக்கும் சேர்த்துதானே கிடைக்கும் .
       

6 comments:

 1. எம் அப்துல் காதர் Says:

  நிறைய தெரிந்தும் (தெரியாத மாதிரி) இங்கு வாழும் அரபு மாந்தர்கள் கூட வெளிநாட்டு மோகம் கொண்டு (அல்லது ஹதீஸில் சொன்னது பிடிக்காமலோ) வெளி நாடுகளுக்கு சென்று வெகுவாக ஆடைகளை குறைத்துக் கொண்டு நடமாடுவதும், இன்னும் என்னென்னவோ அனாச்சாரங்கள் செய்வதும் செய்திகளாகவும் படங்களாகவும் வருகிறது. பார்க்கவே மனம் அச்சம் கொள்கிறது. இதற்க்கெல்லாம் தீர்வில்லையா?? யார் - எப்படி - இவர்களுக்கு புத்தி சொல்வது அல்லது புகட்டுவது??

  Posted on November 8, 2010 at 12:49 AM  

  Jaleela Kamal Says:

  ்ின்் வயதி்ே்ே ெெ்்்ிவு ப்ு்ி ்ிட்டால் உ்கி்் எ ்த ்ூ்ை்ி்் ்ோ்ா்ும் அவ்்்ள் ்்் ்க்க்்ே/
  sinna vayathileeyee ithai paRRi theLivu paduththi viddaaal ulakil entha muulaiyil senRaalum avarkaL nan makkal thaan

  Posted on November 8, 2010 at 10:10 AM  

  ஸாதிகா Says:

  உண்மையான வரிகள்.இப்பொழுது மற்ற கலாச்சாரங்கள் அநாச்சாரங்களாக உருவெடுத்து சமுதாயத்தை கெடுத்து வருகின்றது என்பது வருந்ததக்க உண்மை.

  Posted on November 8, 2010 at 1:16 PM  

  அன்னு Says:

  //பெண்ணின் அலங்காரம் யாருக்காக ஊரில் வருவோர் போவோர் பார்க்கவா..? அது என்ன கடை சரக்கா. //

  Hats off Bhai!!

  Posted on November 9, 2010 at 8:31 PM  

  அன்புடன் மலிக்கா Says:

  எதுவும் ....அடுத்த வீட்டில் நடக்கும் வரை அது நமக்கு ஒரு செய்தி மட்டுமே ..ஆனால் அதுவே நமது வீட்டில் நடக்கும் போது...........................?..!! .//


  நிச்சயமக சகோ. நம்மை நெருங்காடஹ்வரையில் எதுவும் நமக்கு புலப்படாது எனபதைபோல் நடப்போருக்கு நச்..


  //முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சிலர் உடை விஷயத்தில் மெத்தனமாக நடந்துக்கொள்வதனால் நஷ்டம் யாருக்கு.? . இறை கட்டளை ஒன்றை காற்றில் பறக்க விட்டதுக்கு தண்டனையும் , அவர் பெற்றோருக்கும் சேர்த்துதானே கிடைக்கும் .//


  மிக சரியான உண்மை அண்ணாத்தே. நம்மவர்களிடமும் பேணுதல் என்பது கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருகிறது. ஆனால் இந்த மார்கத்தை ஏற்போரிடம் முழுமையான மார்க்கமாய் கடைப்பிடிக்கபடுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

  அறிந்தே அறியாதபோல் நடப்போருக்கு கேடுதான்..
  அல்லாஹ் காப்பற்றட்டும் அனைவரையும்..

  நல்ல தொரு பதிவு..ஏன் அண்ணத்தே தமிழிஸ் இணைக்கவில்லை நிறைய பேருக்கு அறியும் வாய்புகிடைக்குமல்லவா..

  Posted on November 11, 2010 at 7:12 AM  

  எம் அப்துல் காதர் Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்!!

  உங்கள் எல்லோருக்கும் எங்களின் மனம் கனிந்த சலாமத்தான ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

  Posted on November 16, 2010 at 12:47 AM  

Post a Comment