பிரார்த்தனைகள்--1

             நாம்  செய்யும் பிரார்த்தனை ( துவா ) யை இரண்டு வகையாக பிரிக்கலாம்  .அதில்  ஒன்று. வணக்க வடிவில் உள்ள தொழுகை , நோன்பு ,  ஹஜ்  போன்றவை. மற்றது   நேரடியாக கை யேந்தி தேவையை முன் வைத்து பிராத்தனையாகவே கேட்பது .
               இதில் எதை செய்தால் நல்லது என்ற அடிப்படையில் நல்ல அமல் (நற்செயல் )களுக்கிடையில் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம்.
                திக்ர் செய்வது  , குர் ஆன் ஓதுவது , துவா கேட்பது  . இதில்  எது சிறந்ததுன்னு வரும் போது  நாம முதலிடம் கொடுப்பது குர் ஆன் ஓதுவது. , அடுத்ததா திக்ர் , கடைசியா துவா ஆனால்   இது இடத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும் .எப்படி ? அரஃபா மைதானத்தில கூடும் ஹாஜிகள் அங்கு அவ்விடத்தில் குர் ஆன் ஓதுவதை விட துவா கேட்பதில் ஈடுபடுவதே சிறந்தது. இன்னும் ஐங்கால தொகையின்  பின்  குறிப்பிட்ட  திக்ர்களை ஓதுவது  குர் ஆன் ஓது வதை விட சிறந்த்து.
            பொதுவா துவா ஏற்றுக்கொள்ளப்படுவதுக்கான  காரணங்கள் இரண்டு  இருக்கு வெளிப்படையானது  மற்றது  அந்தரங்கமான  பர்சனல் விஷயம்  
              வெளிப்படையான காரணங்களில்   சிலதைப் பார்க்கலாம்  :  தொழுதல் , தர்மம் செய்தல் , நல்ல அமல்கள் செய்து விட்டு துவா கேட்பது ,  அப்படி கேட்கும் போது   அதன் விதி முறைகளையும் பார்ப்பது  நல்லது அது எப்படி.   கிப்லாவை முன்னோக்குதல் , கைகளை உயர்த்துதல்  , அல்லாஹ்வை  முறையாக  புகழ்தல் , நபியவர்களின் மீது ஆரம்பம் ,நடுவில் ,இறுதியில் ஸலவாத்து சொல்லுதல்  ,தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளுதல் , 
           அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல் ,கேட்கும் இடத்துக்கு தகுந்த மாதிரி அவனின் பெயர்களை சொல்லுதல் உதாரணம் .அநியாயக்காரனுக்கு எதிராக கேட்கும் போது அளவற்ற அருளாளான்  , கிருபையாளன்  இப்படி கேட்காமல் அடக்கி ஆள்பவன் , போன்ற திருப்பொயர்களையும் , சுவர்கத்தை கேட்கும் போது  அவனின் அருளை பொருட்டும்  கேட்க வேண்டும்
             இது தவிர ஹதிஸ்களில் வந்துள்ள துவா ஏற்றுக்கொள்ளும் சில நேரங்களும் இருக்கிறது . அதில்  ,  அவன் கீழ் வானத்தில் இறங்கும் நேரமாகிய (அதாவது அவனின் அருட்கொடை அதிக அளவில் இறங்கும் நேரம் ) ஸஹர் நேரம்  , பாங்கிற்கும்  இகாமத்திற்கும் இடையே உள்ள நேரம்  ,வுழுச்செய்த பிறகு ( உடல் சுத்தம் ) ஸுஜுதில்  ,  அத்தஹியாத்தில ஸலாம் கொடுக்கும்  முன் , தொழுகை முடிந்த பின் ,  சேவல் கூவும் போது  , பிரயாணத்தில் இருக்கும் போதும்
              அநீதி இழைக்கப்பட்டவனின் துவாவும் , பெற்றோர் பிள்ளைகலுக்காக கேட்கும் துவாவும் , தனது  சகோதரனுக்காக அவன் இல்லாத இடத்தில் ஒரு முஸ்லீம் கேட்கும் ( ஜனாஸா தொழுகைக்கு  கூட இதான்  அடிப்படை ) துவாவும் , எதிரியுடன் யுத்தத்தில் இருக்கும் போது கேட்கும் துவாவும் ,  அதேப்போல வாரத்தில் ஜும்மா தினம் ( வெள்ளி கிழமை ) அதுவும் குறிப்பாக பகலின் கடைசி ப் பகுதியில்  , மாதங்களில் ரமளான் அதிலும் குறிப்பாக நோன்பு துறக்கும் (இஃப்தார் ) மற்றும் வைக்கும் (ஸஹர் ) நேரம் .லைலத்தில் கத்ர் இரவு ,  அரஃபாத் தினம் , பள்ளி வாசல்களில் ,  மற்றும் காஃபா வில் ஹஜருல் அஸ்வத் -காஃபாவின் வாசலுக்கும் இடையில்  , மகாமு இப்ராஹிம் இடத்திலும் , ஹஜ்ஜுடைய காலத்தில்  அரஃபா மைதானம் , மினா , முஸ்தலிஃபா  , ஸம் ஸம் நீர் அருந்தும்  போதும்  ( எதை நினைத்து குடிக்கிறோமோ அதுக்குறிய மருந்தாக -பரிகாரமாக அமையும் ) ..இப்படி சில இடங்களும் . நேரங்களும் இருக்கிறது.
                பர்ஸனல் அந்தரங்கமான காரணங்களை பார்க்கலாம் :  துவா கேட்பதுக்கு முன்னே உண்மையான  தவ்பா செய்ய வேண்டும் . தன்னிடம் தனக்கு சொந்தாமில்லாத பொருளை உறியவர்களிடம்  ஒப்படைக்க வேண்டும் .உண்ணும் உணவு , உடை , இருப்பிடம் போன்றவை ஹலாலாக இருக்கவேண்டும்  , இனி  பாவமான காரியங்கள செய்வதில்லை என்ற எண்ணமும் , கேட்கும் துவா கண்டிப்பாக அல்லாஹ் நிறை வேற்றுவான் என்ற நம்பிக்கை வைத்து  அவனிடமே அடைகலம் தேடி தன்னுடைய எல்லா காரியத்தையும்  அவனிடமே ஒப்ப்டைத்து துவா ஏற்று கொளப்படும் என்ற மன உறுதியுடன்  திரும்பத் திரும்ப கேட்பதாலும்  நமது பிரார்த்தனை நிறை வேறும்

6 comments:

 1. அன்னு Says:

  // பர்ஸனல் அந்தரங்கமான காரணங்களை பார்க்கலாம் : துவா கேட்பதுக்கு முன்னே உண்மையான தவ்பா செய்ய வேண்டும் . தன்னிடம் தனக்கு சொந்தாமில்லாத பொருளை உறியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் .உண்ணும் உணவு , உடை , இருப்பிடம் போன்றவை ஹலாலாக இருக்கவேண்டும் , //

  இதுதான் மிக மிக முக்கியம் பாய். ஒரு விஷயம் நம்மிடம் ஹறாமானதாக இருந்து விட்டாலும் நம் து'அ அங்கீகரிக்கப்படாது. இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் அனைவரையும் ஹலாலான் முறையில் வாழ வைத்து ஹலாலான முறையிலேயே மவுத்தையும் தருவானாக. ஆமீன். பதிவுக்கு நன்றி.

  Posted on October 19, 2010 at 12:13 AM  

  rk guru Says:

  அருமை பதிவு......வாழ்த்துகள்

  Posted on October 22, 2010 at 9:15 AM  

  ஸாதிகா Says:

  ஜெய்லானி பிரார்த்தனையைப்பற்றி அழகுற எழுதி இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.பொறுமையைக்கொண்டும்,தொழுகையைக்கொண்டும் அல்லாவிடம் உதவிதேடுங்கள் என்றொரு வசனமும் உள்ளது.தொடர்ந்து இது போல் கட்டுரைகளை பகிருங்கள் ஜெய்லானி

  Posted on October 22, 2010 at 11:49 AM  

  Vijiskitchen Says:

  ஜெய் இப்ப தான் இந்த தளம் பார்த்தேன். ஆஹா நல்ல நல்ல துவாக்கள், ப்ரார்த்தனைகளை பற்றி நானும் மேலும் தெரிந்து கொண்டேன்.நன்றி.

  Posted on October 22, 2010 at 5:21 PM  

  எம் அப்துல் காதர் Says:

  பிரார்த்தனைகள் எல்லோருக்குமாகவும் நாம் கேட்போம். அல்லாஹ் ஏந்திய கைகளுக்கு இல்லை என்று சொன்னதில்லை. ஆமீன். நல்லா இருக்கு!!

  Posted on November 4, 2010 at 1:15 AM  

  Jaleela Kamal Says:

  duwa keedkkum vitham paRRi azakaay solli irukkiingka

  vaazththukaL

  து்ா கே்்கும் ்ி்்் ்ற்றி அழ்ாக ்ொல்லி இருக்கீங்் ்ாழ்த்்ுக்்ள்.

  Posted on November 8, 2010 at 10:08 AM  

Post a Comment