அந்தப் பறவை...!!!


அந்தப் பறவை
 அந்தப் பறவை.. அந்தக் குகைக்குள் சென்றது. குகை இருளாக இருந்தது. சற்று நேரத்தில் அந்தப் பறவை வெளியே வந்தது. வந்தபோது, அதன் சொண்டிலிருந்த, வாயிலிருந்த இரையைக் காணவில்லை. அது மீண்டும் போய்விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் அதே பறவை மீண்டும் சற்று உணவை எடுத்துக்கொண்டு வந்தது; உள்ளே சென்றது; மீண்டும் திரும்பிப் போனது. இவ்வாறு மூன்று நான்கு தடவைகள் இந்த நிகழ்வு நடந்தது.

நான் உள்ளே போய் சற்று கூர்ந்து பார்த்தபோது அந்த இருண்ட குகைக்குள்ளே ஒரு குருவிக்கூடு! அந்தக் கூட்டிலே ஒரு பறவை. அந்தப் பறவைக்கு கண்பார்வை இருக்கவில்லை. பறக்கக்கூடிய நிலையிலும் இருக்கவில்லை. ஒரு முடமான, குருடான பறவையாக இருந்தது. அந்தப் பறவைக்குத்தான் இந்தப் பறவை இவ்வாறு ஒருநாளைக்கு பலமுறை இரைகொண்டு வந்து கொடுத்ததை நான் கவனித்தேன். சுபுஹானல்லாஹ்!
இந்தக் காட்டிலேஉயிரினங்களுக்குத் தேவையான எந்த வாழ்வாதாரம் இந்த இடத்திலே, இந்தக் குகையிலே, இந்த இருளுக்குள், இந்தக் கூட்டில் வாழ்கிற, இந்த முடமான, குருடான, பறவைக்கேரிஜ்க் (உணவு) கொடுக்கக்கூடிய அல்லாஹ் எனக்கும் தரமாட்டானாஏன் நான் உணவுக்காக உழைப்புக்காக இவ்வளவு சிரமப்படவேண்டும்? என்று சிந்தித்து, எனது முடிவை மாற்றி நான் ஊர் திரும்பி விட்டேன் என்று (ஸகீக்-உல்-பல்கி) சொன்னார்கள்.

(உஸ்தாத்) இப்ராஹிம்-பின்-அத்ஹம் ரஹ்மத்துலாஹ் அவர்கள் (தன் சீடரான) ஸகீக்-உல்-பல்கியைப் பார்த்து, ‘ஸகீக்-அல்-பல்கியே.. உமது பார்வை வித்தியாசமானதொரு பார்வை. வினோதமான ஒரு பார்வை! நான் இதை எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா, ஸகீக்கே..? முடமான, குருடான, பிறர் தயவில் வாழுகின்ற அந்தப் பறவையாக இருக்காமல், தனக்கும் உணவு தேடி, மற்றொரு ஜீவனுக்கும் உணவு தேடி, தானும் வாழ்ந்து இன்னொரு ஜீவனையும் வாழவைக்கிற அடுத்த பறவையை ஏன் நீர் பார்க்கவில்லை? ஏன் அந்தப் பறவையாக நீர் இருக்கக் கூடாது?’ என்று கேட்டபோது ஸகீக்-உல்-பல்கியின் கண் திறக்கிறது…’
-------------------------------------------------------------------------------------------------------------
உங்களுக்குத் தெரிந்திருக்கும், ‘ரிஜ்க்என்றால் வெறும் உணவு மட்டுமல்ல. இறைவன் கொடுத்த எல்லா கொடைகளும் ரிஜ்க்தான். ரிஜ்க்பற்றி விலாவாரியாக விளக்கிய எங்கள் கம்பெனி PRO (மிஸிரி), ‘ உடை ஒரு ரிஜ்க்’, வேலை ஒரு ரிஜ்க்’ , பிள்ளைகள் ஒரு ரிஜ்க்’ , மனைவி ஒரு ரிஜ்க்என்று சொல்லிக்கொண்டே போனான்.

மனைவியா? அது ‘RISK’ அல்லவா ?!’ என்று நான் கேட்டதும் சந்தோஷத்தில் அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டான்!

2 comments:

 1. ஸாதிகா Says:

  //‘மனைவியா? அது ‘RISK’ அல்லவா ?!’ என்று நான் கேட்டதும் சந்தோஷத்தில் அப்படியே என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டுவிட்டான்!
  // என்ன ஒரு கொலை வெறி...:-)

  Posted on August 9, 2011 at 12:57 PM  

  சக்தி Says:

  dslsm. eid mubaraq

  Posted on August 28, 2011 at 2:23 AM  

Post a Comment