எரிப்பதா ..!! புதைப்பதா..?


     ஒரு மனிதன் இறந்ததும்  புதைப்பது நல்லதா  அல்லது எரிப்பது நல்லதான்னு  விவாதத்தை தொடங்கினார் நண்பர் ஒருவர் . அவரது வாதம் எரிப்பதுதான் நல்லது .புதைத்து வைப்பது இயற்கைக்கு மற்றும் அவர் சார்ந்த மதத்திற்கு  நல்லது இல்லை என்றும் வாதிட்டார்
 முதலில் எரிப்பதால் வரும் தீங்குகளை பார்க்கலாம்
      ஒரு உடலை எரிக்க சுமார் எவ்வளவு விறகு தேவை என்று நமக்கு எல்லாம் தெரியும் .அந்த விறகு கிடைக்க எத்தனை மரத்தை  வெட்ட வேனும் .ஒரு மரம் முழுமையாக வளர எத்தனையோ காலம் ஆகும் போது அதை வளர்ப்பது எளிதா இல்லை அதை வெட்டி நெருப்பில் இடுவது அழகா..!!
    ஏற்கனவே  மரங்கள் எல்லாம் வெட்டி அதாவது காடுகள் எல்லாம் அழிந்து வரும் போது இதுக்காகவும் வீண் செலவு செய்வது தேவையா.? காடுகள் அழிந்தால் மழைப்பொழிவு குறையும் . மழைக் குறைந்தால் விவசாயம் பாதிக்கும் .நிலத்தடி நீர் குறையும் .
     சரி எரிக்க மரம் வேண்டாம் .தற்காலத்தில்  மின்சார அடுப்பு வந்து விட்டது .அதில் எரித்தால் நிமிடத்தில் சாம்பலாகி விடும் என்று சொல்கிறார்கள். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விட்டார்கள். ஒரு மனிதனை சுட்டுப்பொசுக்க  எவ்வளவு  மின்சாரம் செலவாகும் ? எத்தனை உயர் அழுத்தம் தேவை..?  எத்தனை யூனிட் ஓடும். ?...!!  இப்போது ஒரு டியூப்  லைட் ஒரு யூனிட் ஓடினாலே பயந்துகிட்டு  மின்சார சேமிப்புன்னு சொல்லி , அதை விட குறைந்த அளவு மின்சாரத்தை உபயோகிக்கும் (எனர்ஜி சேவர் ) எலெக்டிரானிக்  பல்ப் வாங்கி பயண்படுத்தும் சூழ்நிலை உருவாகி இருக்கும் நேரத்தில் அவசியமான உபயோகத்துக்கே  மின் தடங்கல் மணி கணக்கில் இருக்கும் போது இத்தனை பவர் உள்ள மின் தகனமூட்டி நமக்கு தேவையா..?
  .
     சரி இதில் அடுத்ததாக இந்த மர நெருப்பு , மின்சார நெருப்பிலிருந்து வரும் புகை , அதாவது கேஸ்.உடல் எரிந்து போகும் போது அதிலிருந்து வெளி கிளம்பும் அபாயகரமான விஷ வாயு எங்கே போகிறது ?  ஏற்கனவே ஓசோன் படலத்தில்  ஓட்டை  சுத்தமான காற்று கிடைக்காமல் வளி மண்டலம் மாசுபட்டு இருக்கும் போது  புது விதமாக வாயுக்கள் எங்கே போகும்..?
    இதில் சொன்னது எல்லாம் ஒரு இறந்த நபரை  எரிக்கும் போது மட்டுமே...!!  ஒரு நாளைக்கு எத்தனையோ  பேர் இறக்கிறார்கள். அவருக்கு ஆகும் மரச்செலவு , மின்சார செலவு , வளி மண்டல மாசு எவ்வளவு இருக்குமுன்னு இதை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்
   குரானில்  இறைவன் சொல்லும் போது . ஆதமின் மகன் தன் சகோதரனை வரம்பு மீறி கொன்றவுடன் அந்த உடலை என்ன செய்வது அதனை எப்படி மறைப்பது என்று தெரியாமல் இருக்கும் போது நாம் ஒரு காகத்தை அனுப்பினோம் .அது மண்னை கீறீ காட்டியது . அதன் படி அவர்  மற்றவரை புதைத்தார் “   இதன் படி மனித உலகில்  முதல் உடல் எரிக்கப்படவில்லை புதைக்கதான் பட்டது.  
  மனிதனை புதைக்கும் போது மரம் வெட்டப்படுவதில்லை .அதுக்கான மனித உழைப்பு  செலவாவதில்லை. மழைப்பொழிவும்  தடைபடுவதில்லை. விவசாயம் பாதிப்படைவதில்லை  
   அதிக அளவு மின்சாரம் வீனாவது தடுக்கப்படுவதுடன். தொழிற்சாலைக்கோ  அல்லது வீட்டு உபயோகத்துக்கோ பயண்படுகிறது .  அத்துடன் அபாயகரமான விஷ வாயு வெளிப்படுவதில்லை. காற்று  அதன் இயல்பு நிலையில் இருக்கிறது .
   மண்ணில் உள்ள நுண்ணீயிரிகள் ,பாக்டீரியாக்கள்  மனித உடலை மட்கச்செய்து மண்ணிற்கே எருவாக ஆக்குகிறது . மண்ணிலுள்ள நைட்ரஜன் அளவு அமோனியா போன்ற வற்றை பாதுகாப்பன அளவுக்கு மாற்றி விடுகின்றது . உடலை புதைப்பதால் இதன் படி மனித இனத்திற்கு அதிக அளவு பலன்தான்  கிடைக்கிறது .
   ஆனால் சிலசாஸ்திரங்கள் சம்பிராதயங்கள் என்று சொல்லி சிலர் இன்னும் மக்களை சிந்திக்க விடாமல் முட்டாளாகவே வைத்திருக்கிறார்கள் . நான் இதில் குர் ஆன் வசனத்தை சொன்னது உலகின் முதலில் உடல் அடக்கம் செய்வது எப்படி ஏற்பட்டது என்பதை சொல்லவே மட்டும் .நண்பர் ஏதோ புரிந்தது போல் கடைசியில் தலையாட்டினார்.       

1 comments:

  1. ஆமினா Says:

    சலாம் ஜெய்

    அருமையான நச் பதிவு

    சொன்ன விஷயங்களும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கலக்கல்... மாஷா அல்லாஹ்

    Posted on August 1, 2011 at 12:34 PM  

Post a Comment