சொர்க்கத்தின் திறவு கோல்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சுவர்கத்தின் திரவு கோல் எது என்று கேட்டால்   
உடனே நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
எத்தனை பேர் அதை முறையாக கடைப்பிடிக்கிறோம்.

தொழுகையை நேரம் குறிப்பிட்ட கடமையாக 
நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.  

ஒரு பயணம் மேற்க்கொண்டால் கூட நாம் முதலில்
யோசிப்பது மதிய உணவு எங்கே சாப்பிடலாம்    
இரவு உணவு எங்கே சாப்பிடலாம் எங்கு சுவையாக இருக்கும் 
எங்கே நியாயவிலையில் கிடைக்கும் எங்கே சுத்தமாக இருக்கும் 
என்று தானே தவிர லுஹரையும் அசரையும் எங்கு தொழலாம்
மஃக்ரிபும் இஷாவையும் எங்கு தொழலாம் என்று நினைப்பவர்கள்  
எத்தனை பேர்.

இது அறியாமையில் செய்யும் தவறு அன்று அறிந்தே செய்யும் தவறு.

எவனொருவனிடத்தில் தொழுகையில்லையோ அவனிடமிருந்து 
வேறு எந்த ஒரு அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நபி மொழி 
மாதக்கணக்கில் நோன்பு வைத்தலும் 
கோடி கோடியாக தர்மம் செய்தலும்
இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுலும் 
யாதொருப்பயனும் இல்லை அவனிடத்தில் தொழுகையில்லை என்றால்.

வீண் அரட்டைக்காகவும் கேளிக்கைகளுக்காகவும் 
தொழுகயை தள்ளி வைப்பவர்கள் தான் நம்மில் பலர்.

இறைவன் எந்த அளவுக்கு வலியுறுத்தி இருக்கிறானோ 
அதைவிட சுலபமாகவும் ஆக்கியுள்ளான் .

பயணத்தில் இருக்கிறாயா லுஹரையும் அசரையும் சேர்த்து தொழுதுகொள் 
மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதுகொள்.
அப்பொழுது கூட மக்ரிபை தவிர மற்றதை பாதியாக குறைத்துக்கொள்
{நான்கு ரக்காத் தொழுகையை  எல்லாம் இரண்டாக }

நின்டு தோழமுடியவில்லைய உட்கார்ந்த்து தொழுதுகொள்
அதுவும் முடியவில்லையா படுக்கையில் தொழு .

மறதியில் உறங்கிவிட்டாய விழித்தவுடன் தொழு.

ஒழு செய்ய தண்ணீர் கிடைக்கவில்லையா அல்லது முடியவில்லையா 
தயமம் செய்துகொள்.
  
படைத்தவன் தொழுகையை  எந்தளவு சுலபமாக்கியுள்ளன் என்பதை நாம் சிந்திக்கவேண்டமா.

சுவர்கத்தின் திறவுகோல் எது என்று கேட்டால் 
நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
அந்த உயர்ந்த அந்தஸ்த்தான சுவர்க்கம் கிடைத்த நன்மக்களாக 
நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்.

{இன்ஷா அல்லாஹ் தொடரும்.}

5 comments:

  1. ஸாதிகா Says:

    அல்ஹம்துலில்லாஹ்.என்ன அருமையாக,தெளிவாக சொல்லி இருக்கின்றீர்கள்.//ஒரு பயணம் மேற்க்கொண்டால் கூட நாம் முதலில்
    யோசிப்பது மதிய உணவு எங்கே சாப்பிடலாம்
    இரவு உணவு எங்கே சாப்பிடலாம் எங்கு சுவையாக இருக்கும்
    எங்கே நியாயவிலையில் கிடைக்கும் எங்கே சுத்தமாக இருக்கும்
    என்று தானே தவிர லுஹரையும் அசரையும் எங்கு தொழலாம்
    மஃக்ரிபும் இஷாவையும் எங்கு தொழலாம் என்று நினைப்பவர்கள்
    எத்தனை பேர்.
    // இதெல்லாம் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்?உண்மையிலேயே இந்த இடுகை மனதில் ஆப்படியே பதிந்து விட்டது.நன்றி சகோ!

    Posted on February 18, 2011 at 12:53 PM  

    ஜெய்லானி Says:

    பெரிய விஷயத்தை எளிய முறையில் விளக்கிய விதம் பாரட்ட வேண்டிய ஒன்று ஜஸாகல்லாஹ் க்கைர்

    Posted on February 18, 2011 at 3:08 PM  

    Anisha Yunus Says:

    மாஷா அல்லாஹ் பாய், அருமையான ஆரம்பம். இன்னும் எழுதுங்க. அல்லாஹ் இந்த நல் அமலை பொருந்திக்கொள்ளட்டும். ஆமீன். :)

    Posted on February 20, 2011 at 7:19 AM  

    Pranavam Ravikumar Says:

    வாழ்த்துக்கள்!

    Posted on February 25, 2011 at 12:39 PM  

    Jaleela Kamal Says:

    சுவர்க்கத்தின் திறவு கோல் தொழுகையே அருமையான பகிர்வை பகிர்ந்து இருக்கீங்க
    நாங்களும் எங்கு செல்வதா இருந்தாலும் அசர் தொழுத்துட்டு கிளம்பளாம், மக்ரீப் தொழுதுட்டு கிளம்பளாம் என்று தான் சொல்வது வழக்கம்,
    அதுவும் இல்லாமல் இங்கு துபாய பொருத்தவரை தொழுகைய தவர விட அவசியமே இல்லை பெரிய பெரிய மால்கல் என்றால்லும் பெண்கள் தொழுகைக்கு என்று தனி இடம், அதேபோல நெடுந்தூர பயணம் என்றாலும் சில பெட்ரோல் பங்குகளிலும் பெண்களுக்கு தனி இடம், மஸ்ஜிது களிலும், இதுவரை தொழுகையை ஒரு வக்தும் விடாமல் சரியான முறையில் கடைப்பிடித்து வருகிறோம், த்விர்கக் முடியாத சூழ்னிலைய தவிர..

    Posted on March 1, 2011 at 10:05 AM  

Post a Comment