இறுதி பரிட்சை


             வருஷத்தின்  கடைசி  மாதங்கள்  வரும் போதே  மக்களுக்கு கவலைகள்  கூடவே வந்து விடும் . குழந்தைகள் உள்ள வீட்டிற்கு எல் கே ஜி அட்மிஷன்  கவலை, அதுவே வளர்ந்து விட்டால் காலேஜ் அட்மிஷன்  கவலை . கிடைக்குமோ கிடைக்காதோ இப்படி. இதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கோ  எப்படி எழுதப்போகிறோம் . பாஸ் மார்க் கிடைக்குமோ கிடைக்காதோ  நம்மை விட கூட படிக்கும் இவன்(ள்)  நம்மை விட அதிக மார்க் எடுத்து விடுவார்களோ  இப்படி பட்ட கவலைகள்.
                ஒருவன்(ள்) எப்படி வருஷம் முழுவதும் படித்தான்(ள்) என்பதை வரும் ரிசல்ட் பேப்பர்  சொல்லி விடுகிறது..வரும் முடிவு சிலருக்கு சாதகமாக இல்லாவிட்டால் பாதகமான முடிவினையும் எடுத்து விட்டு குடும்பத்தவரை  காலம் முழுதும் கண்ணீர் விடவும் செய்கிறார்கள்..
                இந்த படிப்பில்  மொத்தம் மூனுவகை இருக்கு அதாவது  இறுதி பரிட்சையில்  வெற்றி பெற மூன்று வித வழிகள் முதல் வகை எப்படின்னா . தினமும் ஒழுங்காக பாடத்தை படிப்பது. படிச்சதும் இல்லாமல் அதை வீட்டில் வந்து திரும்ப படிச்சி பார்ப்பது. தொடர்ந்து படிச்சி வருவதால எதுவும் அத்தனை சீக்கிரம் மறக்காது
     இரெண்டாவது  பரிட்சை நேரத்தில  நேரம் காலம் பார்க்காம விடாம  தொடர்ந்து  படிச்சி அந்த குறுகிய காலத்துல மனப்பாடம் செய்து  அப்படியே  போய் பரிட்சை ஹாலில்  உட்கார்ந்து எழுதி விட்டு வருவது . இதனால எப்படியாவது பாஸ் மார்க் கிடைத்து விடும்.
     மூனாவது  வருஷம் முழுவதும் வாழ்க்கையை  என் ஜாய் செய்து விட்டு  கடைசி நேரத்துல  அதாவது பரிட்சைக்கு  போகும் கடைசி நேரம் மட்டும் பிட் பேப்பர் கொண்டு போவது . மாட்டினால் ஃபெயில் , அவமானம் , மாட்டாவிட்டால் பாஸாவது , பார்டர் மார்க்கில் ஸ்கோர் செய்வது..    
       இப்படிப்பட்ட ஒரு பரிட்சைதான் அவனை மேற்கொண்டு  டாக்டராகவோ  இல்லை ஒரு எஞ்ஜினியராகவோ  அடையாளாம் காட்டுது.  அதுக்குதான் இத்தனை ஆர்பாட்டங்களும் . இதை விட இன்னொரு  வழி இருக்கு அதாவது  இதுதான் வரும் இதைதான் கேட்போம் என்று முதலிலேயே பேப்பர் குடுத்து விட்டால் எல்லாருமே  பாஸாகிடுவோமே  அங்கே தோல்வி என்ற பேச்சே  கிடையாதே..!!   
  
        இதைப்போலவே நமது வாழ்க்கை பரிட்சைகளில் சில கேள்விகள் இருக்கு அதில் ஜெயித்தால் மட்டுமே  நீண்ட சுவர்க வாழ்வு இருக்கு. அப்படி இருக்காதே  செத்தால் அதுக்கு பிறகு நமக்கு என்ன நடக்குமுன்னு தெரியாதே. உங்ககிட்ட யாராவது வந்து சொன்னாங்களான்னு கேட்கலாம் . உங்களுக்கு எப்படி தெரியுமுன்னும் தோனலாம் . நம்மையே  படைச்ச இறைவனுக்கு நாம என்ன கேட்போமுன்னு  தெரியாதா..? அதுக்குதான் நேர்வழிகாட்ட பல இறை தூதர்களையும் அனுப்பி  அதுக்கு தகுந்த விளக்கத்தையும் குடுத்தான்      
       மண்ணறையில்  நம் உடலை வைக்கும் போது கடைசி கேள்வி என்ன கேட்பாங்கன்னு தெரியாமல்  நாம் அங்கே  விழிக்கக்கூடாது  என்பதற்காக , முதலிலேயே நமக்கு பாட பேப்பர் கிடைத்து விட்டது .இந்த மூனு கேள்விதான் வேறு கேள்வியே கிடையது
            இதுதான் அந்த கேள்வி
(      ( 1)               யார் உனது இறைவன் ?
       (2)       யார் உனது  நபி  ?
       (3)       எது உனது வாழ்க்கை  வழிமுறை  ?

      இதுதான் அந்த பதில் 

(1)      ஒரே இறைவன்   (( அரபியில்  அல்லாஹ் ))
(2)      முஹம்மது  நபியே  (ஸல்)
(3)      இவரின் வழிமுறையே  எனது வாழ்க்கை வழி முறையும்

        எவ்வளவு  ஈஸியான கேள்வி .எத்தனை எளிய பதில் .இதை தவிர வேறு கேள்வியும் கிடையாது பதிலும் மாற்றப்பட மாட்டாது . இதில் தவறாக போனால் அதுக்கு பிறகு வரும் எல்லாமே தப்பாதானே இருக்கும் . இதை எனக்கு யாரும் சொல்லவில்லையே ..எனக்கு தெரியாதேன்னும் சொல்ல முடியாது .
          இறைவழியில்  அறவழியில்  வாழ்ந்த (வாழும்)  ஒருவருக்கு இது மிகமிக சுலபமாகவே  இருக்கும்.  அதாவது  பொது வழியில்  கீழே கிடக்கும் சிறு  முள்-ஐ எடுத்து அப்புறப்படுத்துபவரும் என்னை சேர்ந்தவரே ””    இதுவும் ஒரு நபி வழி (மொழி ) தான் . இறைவழியில் நடந்து நாமும் நல்லோர் கூட்டத்தில் சேர பிராத்தனை செய்வோம் .

4 comments:

  1. ராஜவம்சம் Says:

    இருதிப்பரிட்சைக்காக நாம் முதலில் இருந்தே தயாராவது தான் சிறந்த வழி நன்றி.

    Posted on February 17, 2011 at 6:14 PM  

    Asiya Omar Says:

    நல்ல பகிர்வு.சகோ.

    Posted on February 17, 2011 at 6:30 PM  

    ஸாதிகா Says:

    அருமையான உதாரணத்துடன் அழகுற பகிர்ந்துள்ளீர்கள் சகோ.

    Posted on February 18, 2011 at 12:54 PM  

    Anisha Yunus Says:

    அருமையான உதாரணம் பாய். நல்லா விவரிக்கிறீங்க. அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும். :)

    Posted on February 20, 2011 at 7:18 AM  

Post a Comment