நன்மை தீமையின் அளவு கோல்


          காய்கறி கடையோ  இல்லை , மீன் கடைக்கோ  இல்ல எந்த விதமான கடைக்கோ  நாம் போனால்  சாமான் வாங்கிய பிறகு நாம் கேக்கும் அடுத்த கேள்வி  கொஞ்சம் கொசுறு குடுங்கன்னு ..அதாவது டிப்ஸ் மாதிரி எடைக்கு வராத மாதிரி கேட்பது ஒரு கலை ..  இந்த விஷயத்தில்  பெண்கள்  கில்லாடிகள்  அழகாக பேசி விலையையையும் கொஞ்சம் குறைத்து விடுவர்கள் . ஒரு கிலோ கத்திரிகாயிலேயே  இல்லை தக்காளியிலேயே ஒரு பீஸ் அதிகம் போடும் போது அது கடை முதலாளிக்கோ  இல்லை நமக்கோ  ஒரு பொருட்டா  தெரிவதில்லை. 
        அதுப்போல மீன் கடையில் ஒரு மீன் கூடுதலாகவும் , இறைச்சி கடையில்  100 கிராம் இல்லை 150 கிராம் கூடுதலாக தரும் போதும் அது ஒரு பெரிய விவரமாக புரிவதில்லை , இல்லை தெரிவதில்லை  அது நமது ஒரு லாபமாகத்தான்  தெரிகிறது . இப்படி எந்த பொருளாக இருந்தாலும் பேரம் பேசி வாங்கிய பிறகு  இந்த தனிப்பட்ட செயல் கண்டிப்பாக நடக்கும் ..
         இதுவே ரேஷன் கடையா இருந்தால் நிலைமை அப்ப்டியே தலைகீழா இருக்கும் மண்ணென்னையோ  இல்லை பாமாயில் போல எண்னெய் பொருட்கள் வாங்கும் போது ஊத்திய வேகத்திலேயே  நுரை அடித்து அதில் 200 மில்லி  மாதிரி நமக்கு  குறைந்து விடும்..இதுவே அரிசி  மாதிரி  பொருட்கள் , சீனி கேட்கவே வேண்டாம்  எடை முள் நேராக வருவதுக்கு முன்னாலேயே தட்டை கையில் எடுத்து விடுவார்கள்  . அங்கே  நமக்கு பேசவே நேரம் இருக்காது  காரணம்  நாம அதை விட்டு வேர கடையில் போய் சாமான் வாங்க முடியாது.
       இதுவே தங்கம் வாங்கும் கடையில் நிலைமை தலைக்கீழ்  தராசு காற்றுப்போகாத கண்ணாடி பெட்டியினுள்  வைத்து மிக மெல்லிய எடைகற்கள் போட்டு மில்லி ...மில்லி அளவுகளுக்கு கால்குலேட்டர் வைத்து நம்மிடம் காசு கறந்து விடுவார்கள்.. ஏன் தங்கம் விலை அது மாதிரி ..காய்கறி  கடை மாதிரி  இங்கே குடுத்தால்  அப்புரம் தங்கத்துக்கே  மதிப்பில்லை
        இதைப்போல தான் நமது பாவ  புண்ணியங்களுக்கும் ஏற்ப இறைவனிடம் உள்ள தராசும் . அங்கே உள்ள கூட்டத்தில் ரேஷன் கடையைப்போல  எதிர்த்து பேசவோ ,  இல்லை வேறு இடம் மாறியோ  போகமுடியாது  . நகைக்கடையைப்போல  அங்கே மிக மெல்லிய தராசும் இருக்கு .இறைவன் இதை பற்றி சொல்லும் போது .””  அங்கே அணுவளவும் நன்மை செய்தவன் அதனை கண்டுக்கொள்வான்  அங்கே அணுவளவும் தீமை செய்தவனும் அதனை கண்டு கொள்வான் ’’   
’’எந்த ஆத்மாவுக்கும் இங்கே அநியாயம் செய்யப்படமாட்டாது .அதுக்குள்ள கூலியில் எதையும் நாம் குறைக்கவே  மாட்டோம் ’’
“ எவருடைய சுமையையும் (அது நல்லதோ இல்லை கெட்டதோ ) அடுத்தவர் சுமக்க முடியாத நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக ’’
        உண்மையில் நாம இந்த உலகில் எத்தனையோ கஷ்டமான நிலைமையிலும் (( சிலருக்கு அடுத்த வேளை உணவுக்கூட கிடைப்பதில்லை )) அடுத்தவருக்காக  கஷ்ட  நஷ்டங்களை தாங்கிக்கொண்டு வாழ்கிறோம் . கேவலம் சில நூறு , ஆயிரம் ரூபாய்காக முதலாளியின் ஏச்சுக்கும் , பேச்சுக்கும் அடங்கி வேலை செய்ய வேண்டி வருது .ஏன் மாதம் அல்லது அந்த வேலை முடிந்து கிடைக்கும் சம்பளத்துக்காக அதனால நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ளலாம் என்ற ஆசைதான்..   
      அதுப்போலவே இறைவனுக்கு பயந்து அவன் சொல்படி நடந்த நமக்கு அதுக்கு தகுந்த கூலியை நாம் மிகச்சரியாக பெறுவதே ஒவ்வொருவருக்கும் பிடித்ததாக இருக்கும் ..அங்கே  தங்ககடையில் வைத்திருக்கும் தராசுப்போல நமக்கும் எடைப்போட்டால்தானே திருப்தி . அங்கு நமக்கு குறைவாக போட்டால் நம்மால் ஏற்றுக்கொள்ள தான் முடியுமா..? 
            அதனால் இனி  நாம் செய்யும் செயல்களில் இது சின்ன தவறுதானே அதனால் என்ன ஆகிவிடப்போகிறது  என்று எண்ண வேண்டாம் .அதே தவறை அடுத்தவர் நமக்கு செய்தால் என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சால் அந்த தவறை நாம் செய்ய 100 தடவை யோசிப்போம் ..அதன் பலன் தங்க தராசில் வைத்து பார்க்கும் போது  அதன் வலிமை தெரியவரும் 

6 comments:

  1. ராஜவம்சம் Says:

    மாஷா அல்லாஹ் அருமை அழகான உவமையோடு.

    Posted on February 11, 2011 at 9:53 PM  

    ஸாதிகா Says:

    என்ன அருமையான உதாரணத்தை அழகுற மனதில் அப்படியே பதியும் வண்ணம் சொல்லி இருக்கின்றீர்கள்.பாராட்டுகள்.

    Posted on February 12, 2011 at 8:21 PM  

    ஜெய்லானி Says:

    @@@ராஜவம்சம் --வாங்க நிஜாம் பாய் ..கருத்துக்கு நன்றி

    @@@ஸாதிகா --வாங்க ஸாதிகாக்கா..அலஹம்துலில்லாஹ் வருகைக்கு நன்றி

    Posted on February 12, 2011 at 8:40 PM  

    Anisha Yunus Says:

    //அதனால் இனி நாம் செய்யும் செயல்களில் இது சின்ன தவறுதானே அதனால் என்ன ஆகிவிடப்போகிறது என்று எண்ண வேண்டாம் .அதே தவறை அடுத்தவர் நமக்கு செய்தால் என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சால் அந்த தவறை நாம் செய்ய 100 தடவை யோசிப்போம் ..அதன் பலன் தங்க தராசில் வைத்து பார்க்கும் போது அதன் வலிமை தெரியவரும்

    //

    athe pol,intha oru thavaru nammai naragathukku kondu poyitta enna panrathu enrum, intha oru thozugai nammai sorkkathukku kootittu poyidaatha enrum ninaippathum,nammai ner vaziyil vaikkum insha allah. :)

    nalla pagirvu bhai. jasakumullahu khair.

    Posted on February 14, 2011 at 12:22 PM  

    அன்புடன் மலிக்கா Says:

    நிச்சயமாக. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு தகுந்தவாறு நன்மை தீமையுண்டு.

    மிக அழகான விளக்கத்துடன் விளக்கியுள்ளீர்கள் அண்ணாத்தே..

    Posted on February 15, 2011 at 3:27 PM  

    Dhowlathbanu Says:

    மிகவும் அழுத்தமாக மனதில் பதியும் கருத்துக்களை பதிந்தமைக்கு நன்றி

    Posted on February 18, 2011 at 9:46 AM  

Post a Comment