சொர்க்கத்தின் திறவு கோல்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சுவர்கத்தின் திரவு கோல் எது என்று கேட்டால்   
உடனே நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
எத்தனை பேர் அதை முறையாக கடைப்பிடிக்கிறோம்.

தொழுகையை நேரம் குறிப்பிட்ட கடமையாக 
நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.  

ஒரு பயணம் மேற்க்கொண்டால் கூட நாம் முதலில்
யோசிப்பது மதிய உணவு எங்கே சாப்பிடலாம்    
இரவு உணவு எங்கே சாப்பிடலாம் எங்கு சுவையாக இருக்கும் 
எங்கே நியாயவிலையில் கிடைக்கும் எங்கே சுத்தமாக இருக்கும் 
என்று தானே தவிர லுஹரையும் அசரையும் எங்கு தொழலாம்
மஃக்ரிபும் இஷாவையும் எங்கு தொழலாம் என்று நினைப்பவர்கள்  
எத்தனை பேர்.

இது அறியாமையில் செய்யும் தவறு அன்று அறிந்தே செய்யும் தவறு.

எவனொருவனிடத்தில் தொழுகையில்லையோ அவனிடமிருந்து 
வேறு எந்த ஒரு அமல்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது நபி மொழி 
மாதக்கணக்கில் நோன்பு வைத்தலும் 
கோடி கோடியாக தர்மம் செய்தலும்
இறுதிக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுலும் 
யாதொருப்பயனும் இல்லை அவனிடத்தில் தொழுகையில்லை என்றால்.

வீண் அரட்டைக்காகவும் கேளிக்கைகளுக்காகவும் 
தொழுகயை தள்ளி வைப்பவர்கள் தான் நம்மில் பலர்.

இறைவன் எந்த அளவுக்கு வலியுறுத்தி இருக்கிறானோ 
அதைவிட சுலபமாகவும் ஆக்கியுள்ளான் .

பயணத்தில் இருக்கிறாயா லுஹரையும் அசரையும் சேர்த்து தொழுதுகொள் 
மக்ரிபையும் இஷாவையும் சேர்த்து தொழுதுகொள்.
அப்பொழுது கூட மக்ரிபை தவிர மற்றதை பாதியாக குறைத்துக்கொள்
{நான்கு ரக்காத் தொழுகையை  எல்லாம் இரண்டாக }

நின்டு தோழமுடியவில்லைய உட்கார்ந்த்து தொழுதுகொள்
அதுவும் முடியவில்லையா படுக்கையில் தொழு .

மறதியில் உறங்கிவிட்டாய விழித்தவுடன் தொழு.

ஒழு செய்ய தண்ணீர் கிடைக்கவில்லையா அல்லது முடியவில்லையா 
தயமம் செய்துகொள்.
  
படைத்தவன் தொழுகையை  எந்தளவு சுலபமாக்கியுள்ளன் என்பதை நாம் சிந்திக்கவேண்டமா.

சுவர்கத்தின் திறவுகோல் எது என்று கேட்டால் 
நாம் எல்லோரும் சொல்வோம் தொழுகை என்று
அந்த உயர்ந்த அந்தஸ்த்தான சுவர்க்கம் கிடைத்த நன்மக்களாக 
நம் அனைவரையும் ஆக்கியருள்வானாக
ஆமின் ஆமின் யாரப்பில் ஆலமின்.

{இன்ஷா அல்லாஹ் தொடரும்.}

இறுதி பரிட்சை


             வருஷத்தின்  கடைசி  மாதங்கள்  வரும் போதே  மக்களுக்கு கவலைகள்  கூடவே வந்து விடும் . குழந்தைகள் உள்ள வீட்டிற்கு எல் கே ஜி அட்மிஷன்  கவலை, அதுவே வளர்ந்து விட்டால் காலேஜ் அட்மிஷன்  கவலை . கிடைக்குமோ கிடைக்காதோ இப்படி. இதில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கோ  எப்படி எழுதப்போகிறோம் . பாஸ் மார்க் கிடைக்குமோ கிடைக்காதோ  நம்மை விட கூட படிக்கும் இவன்(ள்)  நம்மை விட அதிக மார்க் எடுத்து விடுவார்களோ  இப்படி பட்ட கவலைகள்.
                ஒருவன்(ள்) எப்படி வருஷம் முழுவதும் படித்தான்(ள்) என்பதை வரும் ரிசல்ட் பேப்பர்  சொல்லி விடுகிறது..வரும் முடிவு சிலருக்கு சாதகமாக இல்லாவிட்டால் பாதகமான முடிவினையும் எடுத்து விட்டு குடும்பத்தவரை  காலம் முழுதும் கண்ணீர் விடவும் செய்கிறார்கள்..
                இந்த படிப்பில்  மொத்தம் மூனுவகை இருக்கு அதாவது  இறுதி பரிட்சையில்  வெற்றி பெற மூன்று வித வழிகள் முதல் வகை எப்படின்னா . தினமும் ஒழுங்காக பாடத்தை படிப்பது. படிச்சதும் இல்லாமல் அதை வீட்டில் வந்து திரும்ப படிச்சி பார்ப்பது. தொடர்ந்து படிச்சி வருவதால எதுவும் அத்தனை சீக்கிரம் மறக்காது
     இரெண்டாவது  பரிட்சை நேரத்தில  நேரம் காலம் பார்க்காம விடாம  தொடர்ந்து  படிச்சி அந்த குறுகிய காலத்துல மனப்பாடம் செய்து  அப்படியே  போய் பரிட்சை ஹாலில்  உட்கார்ந்து எழுதி விட்டு வருவது . இதனால எப்படியாவது பாஸ் மார்க் கிடைத்து விடும்.
     மூனாவது  வருஷம் முழுவதும் வாழ்க்கையை  என் ஜாய் செய்து விட்டு  கடைசி நேரத்துல  அதாவது பரிட்சைக்கு  போகும் கடைசி நேரம் மட்டும் பிட் பேப்பர் கொண்டு போவது . மாட்டினால் ஃபெயில் , அவமானம் , மாட்டாவிட்டால் பாஸாவது , பார்டர் மார்க்கில் ஸ்கோர் செய்வது..    
       இப்படிப்பட்ட ஒரு பரிட்சைதான் அவனை மேற்கொண்டு  டாக்டராகவோ  இல்லை ஒரு எஞ்ஜினியராகவோ  அடையாளாம் காட்டுது.  அதுக்குதான் இத்தனை ஆர்பாட்டங்களும் . இதை விட இன்னொரு  வழி இருக்கு அதாவது  இதுதான் வரும் இதைதான் கேட்போம் என்று முதலிலேயே பேப்பர் குடுத்து விட்டால் எல்லாருமே  பாஸாகிடுவோமே  அங்கே தோல்வி என்ற பேச்சே  கிடையாதே..!!   
  
        இதைப்போலவே நமது வாழ்க்கை பரிட்சைகளில் சில கேள்விகள் இருக்கு அதில் ஜெயித்தால் மட்டுமே  நீண்ட சுவர்க வாழ்வு இருக்கு. அப்படி இருக்காதே  செத்தால் அதுக்கு பிறகு நமக்கு என்ன நடக்குமுன்னு தெரியாதே. உங்ககிட்ட யாராவது வந்து சொன்னாங்களான்னு கேட்கலாம் . உங்களுக்கு எப்படி தெரியுமுன்னும் தோனலாம் . நம்மையே  படைச்ச இறைவனுக்கு நாம என்ன கேட்போமுன்னு  தெரியாதா..? அதுக்குதான் நேர்வழிகாட்ட பல இறை தூதர்களையும் அனுப்பி  அதுக்கு தகுந்த விளக்கத்தையும் குடுத்தான்      
       மண்ணறையில்  நம் உடலை வைக்கும் போது கடைசி கேள்வி என்ன கேட்பாங்கன்னு தெரியாமல்  நாம் அங்கே  விழிக்கக்கூடாது  என்பதற்காக , முதலிலேயே நமக்கு பாட பேப்பர் கிடைத்து விட்டது .இந்த மூனு கேள்விதான் வேறு கேள்வியே கிடையது
            இதுதான் அந்த கேள்வி
(      ( 1)               யார் உனது இறைவன் ?
       (2)       யார் உனது  நபி  ?
       (3)       எது உனது வாழ்க்கை  வழிமுறை  ?

      இதுதான் அந்த பதில் 

(1)      ஒரே இறைவன்   (( அரபியில்  அல்லாஹ் ))
(2)      முஹம்மது  நபியே  (ஸல்)
(3)      இவரின் வழிமுறையே  எனது வாழ்க்கை வழி முறையும்

        எவ்வளவு  ஈஸியான கேள்வி .எத்தனை எளிய பதில் .இதை தவிர வேறு கேள்வியும் கிடையாது பதிலும் மாற்றப்பட மாட்டாது . இதில் தவறாக போனால் அதுக்கு பிறகு வரும் எல்லாமே தப்பாதானே இருக்கும் . இதை எனக்கு யாரும் சொல்லவில்லையே ..எனக்கு தெரியாதேன்னும் சொல்ல முடியாது .
          இறைவழியில்  அறவழியில்  வாழ்ந்த (வாழும்)  ஒருவருக்கு இது மிகமிக சுலபமாகவே  இருக்கும்.  அதாவது  பொது வழியில்  கீழே கிடக்கும் சிறு  முள்-ஐ எடுத்து அப்புறப்படுத்துபவரும் என்னை சேர்ந்தவரே ””    இதுவும் ஒரு நபி வழி (மொழி ) தான் . இறைவழியில் நடந்து நாமும் நல்லோர் கூட்டத்தில் சேர பிராத்தனை செய்வோம் .

நன்மை தீமையின் அளவு கோல்


          காய்கறி கடையோ  இல்லை , மீன் கடைக்கோ  இல்ல எந்த விதமான கடைக்கோ  நாம் போனால்  சாமான் வாங்கிய பிறகு நாம் கேக்கும் அடுத்த கேள்வி  கொஞ்சம் கொசுறு குடுங்கன்னு ..அதாவது டிப்ஸ் மாதிரி எடைக்கு வராத மாதிரி கேட்பது ஒரு கலை ..  இந்த விஷயத்தில்  பெண்கள்  கில்லாடிகள்  அழகாக பேசி விலையையையும் கொஞ்சம் குறைத்து விடுவர்கள் . ஒரு கிலோ கத்திரிகாயிலேயே  இல்லை தக்காளியிலேயே ஒரு பீஸ் அதிகம் போடும் போது அது கடை முதலாளிக்கோ  இல்லை நமக்கோ  ஒரு பொருட்டா  தெரிவதில்லை. 
        அதுப்போல மீன் கடையில் ஒரு மீன் கூடுதலாகவும் , இறைச்சி கடையில்  100 கிராம் இல்லை 150 கிராம் கூடுதலாக தரும் போதும் அது ஒரு பெரிய விவரமாக புரிவதில்லை , இல்லை தெரிவதில்லை  அது நமது ஒரு லாபமாகத்தான்  தெரிகிறது . இப்படி எந்த பொருளாக இருந்தாலும் பேரம் பேசி வாங்கிய பிறகு  இந்த தனிப்பட்ட செயல் கண்டிப்பாக நடக்கும் ..
         இதுவே ரேஷன் கடையா இருந்தால் நிலைமை அப்ப்டியே தலைகீழா இருக்கும் மண்ணென்னையோ  இல்லை பாமாயில் போல எண்னெய் பொருட்கள் வாங்கும் போது ஊத்திய வேகத்திலேயே  நுரை அடித்து அதில் 200 மில்லி  மாதிரி நமக்கு  குறைந்து விடும்..இதுவே அரிசி  மாதிரி  பொருட்கள் , சீனி கேட்கவே வேண்டாம்  எடை முள் நேராக வருவதுக்கு முன்னாலேயே தட்டை கையில் எடுத்து விடுவார்கள்  . அங்கே  நமக்கு பேசவே நேரம் இருக்காது  காரணம்  நாம அதை விட்டு வேர கடையில் போய் சாமான் வாங்க முடியாது.
       இதுவே தங்கம் வாங்கும் கடையில் நிலைமை தலைக்கீழ்  தராசு காற்றுப்போகாத கண்ணாடி பெட்டியினுள்  வைத்து மிக மெல்லிய எடைகற்கள் போட்டு மில்லி ...மில்லி அளவுகளுக்கு கால்குலேட்டர் வைத்து நம்மிடம் காசு கறந்து விடுவார்கள்.. ஏன் தங்கம் விலை அது மாதிரி ..காய்கறி  கடை மாதிரி  இங்கே குடுத்தால்  அப்புரம் தங்கத்துக்கே  மதிப்பில்லை
        இதைப்போல தான் நமது பாவ  புண்ணியங்களுக்கும் ஏற்ப இறைவனிடம் உள்ள தராசும் . அங்கே உள்ள கூட்டத்தில் ரேஷன் கடையைப்போல  எதிர்த்து பேசவோ ,  இல்லை வேறு இடம் மாறியோ  போகமுடியாது  . நகைக்கடையைப்போல  அங்கே மிக மெல்லிய தராசும் இருக்கு .இறைவன் இதை பற்றி சொல்லும் போது .””  அங்கே அணுவளவும் நன்மை செய்தவன் அதனை கண்டுக்கொள்வான்  அங்கே அணுவளவும் தீமை செய்தவனும் அதனை கண்டு கொள்வான் ’’   
’’எந்த ஆத்மாவுக்கும் இங்கே அநியாயம் செய்யப்படமாட்டாது .அதுக்குள்ள கூலியில் எதையும் நாம் குறைக்கவே  மாட்டோம் ’’
“ எவருடைய சுமையையும் (அது நல்லதோ இல்லை கெட்டதோ ) அடுத்தவர் சுமக்க முடியாத நாளை நபியே நீர் நினைவூட்டுவீராக ’’
        உண்மையில் நாம இந்த உலகில் எத்தனையோ கஷ்டமான நிலைமையிலும் (( சிலருக்கு அடுத்த வேளை உணவுக்கூட கிடைப்பதில்லை )) அடுத்தவருக்காக  கஷ்ட  நஷ்டங்களை தாங்கிக்கொண்டு வாழ்கிறோம் . கேவலம் சில நூறு , ஆயிரம் ரூபாய்காக முதலாளியின் ஏச்சுக்கும் , பேச்சுக்கும் அடங்கி வேலை செய்ய வேண்டி வருது .ஏன் மாதம் அல்லது அந்த வேலை முடிந்து கிடைக்கும் சம்பளத்துக்காக அதனால நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ளலாம் என்ற ஆசைதான்..   
      அதுப்போலவே இறைவனுக்கு பயந்து அவன் சொல்படி நடந்த நமக்கு அதுக்கு தகுந்த கூலியை நாம் மிகச்சரியாக பெறுவதே ஒவ்வொருவருக்கும் பிடித்ததாக இருக்கும் ..அங்கே  தங்ககடையில் வைத்திருக்கும் தராசுப்போல நமக்கும் எடைப்போட்டால்தானே திருப்தி . அங்கு நமக்கு குறைவாக போட்டால் நம்மால் ஏற்றுக்கொள்ள தான் முடியுமா..? 
            அதனால் இனி  நாம் செய்யும் செயல்களில் இது சின்ன தவறுதானே அதனால் என்ன ஆகிவிடப்போகிறது  என்று எண்ண வேண்டாம் .அதே தவறை அடுத்தவர் நமக்கு செய்தால் என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சால் அந்த தவறை நாம் செய்ய 100 தடவை யோசிப்போம் ..அதன் பலன் தங்க தராசில் வைத்து பார்க்கும் போது  அதன் வலிமை தெரியவரும்