ஒரே செயல் , வித்தியாசம்

             நம்மில்  பலர் சொல்வது ,  அடிக்கடி சொல்லும் வார்த்தை ,யார்தான் தவறு செய்ய வில்லை  , மனிதன் தானே தவறு செய்ய முடியும் அதனால் விட்டுத்தள்ளுங்கள் என்று , எந்த தவற்றையும்  அலச்சியமாக விட்டு விடுகிறோம் . செய்யும் தவறுகள் நமக்கு ரொமப சின்னதாக கடுகுப் போல  தெரிகிறது.. ஆனால்  அதே தவறை வேறு யாராவது செய்தால் நாம் விடுவது  இல்லை.. அது நமக்கு மலைப்போல தெரிகிறது.

                 தவறுகள் நாம் மட்டும் செய்வது இல்லை .ஜின் இனமும்தான் செய்கிறது..பகுத்தறிவு உள்ள  இந்த  இரெண்டு இனமும்தான் சொர்கமோ நரகமோ  போகக்கூடியது...இப்லீஷ, சைத்தான்  என்று சொல்லக்கூடிய அஸாஜீல்   ஜின் இனத்தை சேர்த்தவனே..!!

                இறைவன் படைத்த முதல் மனிதரான ஆதம்  (அலை ) அவர்களை  மலக்குகள் எல்லாரையும் அல்லாஹ் ஸஜ்தா செய்ய உத்தரவிட்டான் . அனைத்து மலக்குகளும் ஆதம் (அலை) அவர்களுக்கு ஸ்ஜ்தா செய்ய சைத்தான் நான் நெருப்பினால் படைக்க பட்டவன் ,  கேவலம் மண்ணால் படைக்கப்பட்டதற்கு ஸஜ்தா செய்வதா முடியவே முடியாது . என்று மறுத்து விட்டான்
                    தனது பதவி மற்றும் ஆணவம்  கண்களை மறைத்து விட்டது. தான் செய்வது தவறு என்றும் புரிந்துக்கொள்ளவில்லை  அதனால்  இறைவனால் அங்கிருந்து துரத்தப்பட்டு  உலக முடிவு நாள் வரை அவனுக்கு அல்லாஹ்வின் சாபமும் மற்றும் நமது சாபமும் அவன் மீது இருக்கிறது. இதுவுமில்லாமல் நம்மையும் வழிக்கெடுப்பதாக அதே அல்லாஹ் மீது சபதமும் பெற்று வந்துள்ளான் . இன்றும்  நமது எதிரியாக இருக்கிறான்
                 
                     அதே நேரம்  ஆதம் (அலை ) அவர்களும் ஒரு தவறு செய்தார்கள்.. இறைவன் விலக்கி இருந்த கனியை  சைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டது. இதனால் சுவர்கத்தை விட்டு வெளியேறியது.  ஆனால்  அவர்கள்  தனது தவறை நியாயப்படுத்த வில்லை..  மாறாக தன்னையே நொந்துக்கொண்டு   அல்லாஹ் ரஹ்மானாகவும் ( பேரருளாளன் )  ரஹீமாகவும்  (பேரன்பு கொண்டவன் ) இருக்கிறான் என  புகழ்ந்து உடனே மன்னிப்பு வேண்டி இறைஞ்சினார்கள்
              
                   மனம் உருகி , தன்னைத் தாழ்த்திக் கொண்டுதவ்பா செய்தார்கள். அல்லாஹ் மனமிரங்கி  அவர்களின் தவ்பா ( பாவ மன்னிப்பு ) வை ஏற்று
 கொண்டதுடன் . ஆதம் அவர்களுக்கும் சில வார்த்தைகளை க்ற்றுத்தந்து  அதன் மூலம் துவா செய்ய  வைத்து மன்னித்தான்   (  அல் பக்ரா-:  36,37 ) 

         இதில்  இரெண்டு பேருமே ஒரே வித பாவமே செய்தார்கள் . அது இறை கட்டளையை மீறியது..  ஒருவருக்கு யுகம் முடியும் வரையில்  சாபம், கேவலப்படுத்துதல் , அதன் பிறகும் மோசமான தண்டனை ..அந்த தண்டனையும் முன்பே அறிவிக்க பட்ட மோசமான நரகத்தண்டனை.   ஆனால் மற்றவர்க்கு அழகிய  பாவமன்னிப்பு  , துவா செய்ய செல்லும் வார்த்தைகள், இனி வரும் சந்ததியையும்  காக்கும்     விதமான தூதர்களை பற்றீயும் நற்செய்தி, அதனால் நரகத்தை விட்டு தப்பும் வழிமுறைகள்.. ஏன் இப்படி ஒரே செயலுக்கு இரெண்டு விதமான எதிர் வினைகள்..

        ஒருவர் தனது செயலுக்கு வருந்தவுமில்லை, நியாயப்படுத்தவே முயற்சித்தார். அதுவும் தனது உயர்ந்த பதவி ஆனவமும் ஒரு புறம்  ( நெருப்பால் படைக்க பட்டதும் , இன்னும் ஒரு பகுதியினருக்கு தலைவராக இருந்த தால் )தற்பெருமையும் ,தான் பேசுவதே சரி என்று என்ன வைத்தது. ஆனால் மற்றவரோ  எந்த வித சாக்கு போக்கோ  சொல்லவில்லை.தனது தவற்றை ஒப்புக்கொண்டார்.. பாவ மன்னிப்பும் வேண்டினார். அதனால் அவருக்கு அழகிய மன்னிப்பும்  கிடத்தது.

உலகில் நிறைய குற்றம் நடப்பதுக்கு காரணம் யார் நம்மை பார்க்கிறார்கள், யார் நம்மை கேட்கப்போகிறார்கள் என்ற நினைவே..! கயிற்றில கட்டப்பட்டு விட்ட ஆடு போல நாம் என்பதை மறக்கக்கூடாது. நமது குற்றங்களோ செயல்களோ  ஒரு அளவு வரை தான், இறைவனின்  பிடி இறுகும் போது அவனை காப்பாற்ற  உலகில் ஒரு வரையும் பர்க்க முடியாது.

         அதனால் தவறுகளை தவறுகளாக  ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்பதிலும் தான் மனிதனின் சிறப்பே இருக்கிறது கேவலமாக சாக்கு ப்போக்கு சொல்வதை விட்டொளிப்போம்.. 

ஆடை

              உலகில் மனித இனத்திற்குதான் ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை  இறைவன்  கொடுத்துள்ளான்.  அதே நேரம் அவன் எப்படியாவது முட்டி மோதி ,தேடி வாழ்ந்து விட்டு வரட்டும் என்று எண்ணாமல்  அப்போதைக்கப்போது  தேவைக்கு ஏற்ப தூதர்களையும்  நம்மிடையே அனுப்பி , தேவைப்படும் போது சட்ட திட்டங்களையும்    அனுப்பினான்.
             மக்கள் தொகையும் அதிகமானதும் , மனிதன் தானே எல்லாம் தெரிந்தவன் என்று கெட்டு அலையாமல் நேர்வழியை நேர்வழியாகவே அனுப்பி வைத்தான் . அதில் முக்கியமான சட்டங்களாகவே வைத்தது  உடை, அலங்காரம் பற்றியதும் ஒன்னுதான் .  தன்னுடைய அல்குர் ஆனில் அடிக்கடி  ஒரு வார்த்தையை உபயோகித்துள்ளான் .
               அது நீங்கள்  சிந்தீப்பீர்களாக ,நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா..? , சிந்திக்கும்  மக்களுக்கு இதில் அத்தாட்சி உள்ளது , இப்படி நம்மை யோசிக்க வைக்க என்ன காரணம் . மனிதன் தவறு இழைக்காமல்  நேர்வழி  வாழ தனது ஆறாவது  அறிவை உபயோகித்து பார்க்கவே.. நன்மை தீமை எது என்று பிரித்து பார்க்கவே அதோடு இறைவனின் கருனையும் கூடவே வருமாயின் அவன் எவ்வளவு பாக்கியசாலி.
              எந்த ஒரு மனிதனும் தன் தங்கையை , அக்காவை , மனைவியை ,தாயை நாலு பேர் கெட்ட கண்களோடு பார்ப்பதை விரும்ப மாட்டான். ஏன் ? , அப்படி விரும்பினால் அவன் மனித இனமே இல்லை. அதே போல ஒரு குடும்ப தலைவன் தன் மகளை, மனைவியை நாலு பேர் முன்னால் அறை குறை ஆடையோடு , உடல் உறுப்புக்கள் வெளியே தெரிகிற மாதிரி பார்க்க அனுமதிக்க மாட்டான் . ஏன் ?

        அப்போது மட்டும் அவனுக்கு தன்மானம் , வீரம் எல்லாம்  வருகிறது .அதே  வேறு யாராவது  போனால் இன்னும் இலவச தரிசனம் கிடைக்காதான்னு  பார்க்கிறான் .கேட்டால் எல்லாம் நாகரீகம் வளர்ந்து விட்டது  . இந்த வயதில் இப்படிதான் , அப்புரம் வேலை , கல்யாணம் என்று குடும்பசுமை வந்து விட்டால் இதெல்லாம் அனுபவிக்க முடியாது என்று ஒரு சப்பை கட்டு கட்டுகிறான் .
         
               இஸ்லாமில்,  தன் தாயை பார்க்கக்கூட  அவளுடைய (அறை கதைவை தட்டி விட்டு  ) அனுமதியின்று பார்க்க கூடாது  என்று சொல்கிரது ஒரு நாளில் மூன்று வித நேரங்களில் தனித்திருக்கும் நேரம் , தொழுகைக்கான நேரம் , இப்படி.., மிக நெருங்கிய   சொந்தங்களை தவிர உறவு முறைகளில் ஆண்கள் யாரையும்  திரை இன்றி பார்க்க க்கூடாது  . பேசக்கூடாது .ஏழு வயது வந்து விட்டால் தன் பிள்ளைகளை  தனியே படுக்க வைக்க பழக்கவேண்டும் .
               ஏன் ?  எவன் மனதில் நோய் இருக்கிறதோ அவன் காதல் கொள்வான் ( ஹதிஸ் )..!!அதனை தொடர்ந்து  தேவையில்லாத பிரச்சனைகள் வரும் .ஒரு விஷச்செடி துளிர் விடும் போது அதை வெறும் கையால் கிள்ளி எறிவது எளிதா இல்லை மரமாக வளர்ந்ததும்   நாலு ஆள் சேர்ந்து வெட்டி , சாய்ப்பது எளிதா..?
                இப்படியாக குடும்ப சொந்த பந்தங்களிளேயே  நேரிடையாக பார்கக் க்கூடாது , பேசக்கூடாதுன்னு வைத்திருப்பது  எத்தனையோ அனாச்சாரங்களை ஆரம்பத்திலேயே  இஸ்லாம் நீக்கி தடுத்து விட்டது.
                பெண்ணின் அலங்காரம் யாருக்காக ஊரில் வருவோர் போவோர் பார்க்கவா..? அது என்ன கடை சரக்கா. அழகாக்கி கொள்வது என்பது வேறு அழகாக பிறர் பார்க்க காட்ட நினைப்பது வேறு. நடைமுறையில் ஒரு பெண் உடலை மறைத்துக் கொண்டு ஒரு சால்வை மாதிரி போர்த்திக்கொண்டு போனால் யாராக இருந்தாலும் ஒரு தடவை பார்த்து விட்டு  அவருக்கும் தனது வேலையில் கவனம் திரும்பி விடும் . இதுவே கண் கவரும் வகையில்,போனால் நினைவு அவள் போகும் வரை, கண்ணைவிட்டு மறைந்த பின்னும் தேவை இல்லாத  எண்ணங்களை நினைக்கவே தோனும்  .
        பிறகு தன் மனைவி மக்களுடன் ஒப்பிட்டு பார்க்க தோனும் .வீட்டில் நீ அவளை மாதிரி புடவை கட்டுவது இல்லை , அவளை மாதிரி மேக்கப் போடுவது இல்லை போன்ற ஒப்பீட்டு மனப்பான்மையை  கிளப்பிவிட்டு கடைசியில் குடும்ப ஒற்றுமைக்கே வேட்டு வைத்து விடும்.  ஆள் பாதி ஆடைப்பாதி  , ஆனால் பாதி பிரச்சனை ஆடையால்தானே வருகிறது
      நான் எப்படி வேண்டுமானாலும் வருவேன் .உன் கண்னை மூடிக்கொள் என்று சொல்வது அந்த நிமிடத்திற்கு வேண்டுமானாலும் நமது வாயை அடைக்க சரியாக இருக்கும் . எதுவும் ....அடுத்த வீட்டில் நடக்கும் வரை அது நமக்கு ஒரு செய்தி மட்டுமே ..ஆனால் அதுவே நமது வீட்டில் நடக்கும் போது...........................?..!! .
       முஸ்லீம்கள் என்று சொல்லக்கூடிய ஒரு சிலர் உடை விஷயத்தில் மெத்தனமாக நடந்துக்கொள்வதனால் நஷ்டம் யாருக்கு.?   . இறை கட்டளை ஒன்றை காற்றில் பறக்க விட்டதுக்கு தண்டனையும் ,  அவர் பெற்றோருக்கும் சேர்த்துதானே கிடைக்கும் .
       

பிரார்த்தனைகள்--1

             நாம்  செய்யும் பிரார்த்தனை ( துவா ) யை இரண்டு வகையாக பிரிக்கலாம்  .அதில்  ஒன்று. வணக்க வடிவில் உள்ள தொழுகை , நோன்பு ,  ஹஜ்  போன்றவை. மற்றது   நேரடியாக கை யேந்தி தேவையை முன் வைத்து பிராத்தனையாகவே கேட்பது .
               இதில் எதை செய்தால் நல்லது என்ற அடிப்படையில் நல்ல அமல் (நற்செயல் )களுக்கிடையில் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம்.
                திக்ர் செய்வது  , குர் ஆன் ஓதுவது , துவா கேட்பது  . இதில்  எது சிறந்ததுன்னு வரும் போது  நாம முதலிடம் கொடுப்பது குர் ஆன் ஓதுவது. , அடுத்ததா திக்ர் , கடைசியா துவா ஆனால்   இது இடத்துக்கு தகுந்த மாதிரி மாறுபடும் .எப்படி ? அரஃபா மைதானத்தில கூடும் ஹாஜிகள் அங்கு அவ்விடத்தில் குர் ஆன் ஓதுவதை விட துவா கேட்பதில் ஈடுபடுவதே சிறந்தது. இன்னும் ஐங்கால தொகையின்  பின்  குறிப்பிட்ட  திக்ர்களை ஓதுவது  குர் ஆன் ஓது வதை விட சிறந்த்து.
            பொதுவா துவா ஏற்றுக்கொள்ளப்படுவதுக்கான  காரணங்கள் இரண்டு  இருக்கு வெளிப்படையானது  மற்றது  அந்தரங்கமான  பர்சனல் விஷயம்  
              வெளிப்படையான காரணங்களில்   சிலதைப் பார்க்கலாம்  :  தொழுதல் , தர்மம் செய்தல் , நல்ல அமல்கள் செய்து விட்டு துவா கேட்பது ,  அப்படி கேட்கும் போது   அதன் விதி முறைகளையும் பார்ப்பது  நல்லது அது எப்படி.   கிப்லாவை முன்னோக்குதல் , கைகளை உயர்த்துதல்  , அல்லாஹ்வை  முறையாக  புகழ்தல் , நபியவர்களின் மீது ஆரம்பம் ,நடுவில் ,இறுதியில் ஸலவாத்து சொல்லுதல்  ,தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளுதல் , 
           அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துதல் ,கேட்கும் இடத்துக்கு தகுந்த மாதிரி அவனின் பெயர்களை சொல்லுதல் உதாரணம் .அநியாயக்காரனுக்கு எதிராக கேட்கும் போது அளவற்ற அருளாளான்  , கிருபையாளன்  இப்படி கேட்காமல் அடக்கி ஆள்பவன் , போன்ற திருப்பொயர்களையும் , சுவர்கத்தை கேட்கும் போது  அவனின் அருளை பொருட்டும்  கேட்க வேண்டும்
             இது தவிர ஹதிஸ்களில் வந்துள்ள துவா ஏற்றுக்கொள்ளும் சில நேரங்களும் இருக்கிறது . அதில்  ,  அவன் கீழ் வானத்தில் இறங்கும் நேரமாகிய (அதாவது அவனின் அருட்கொடை அதிக அளவில் இறங்கும் நேரம் ) ஸஹர் நேரம்  , பாங்கிற்கும்  இகாமத்திற்கும் இடையே உள்ள நேரம்  ,வுழுச்செய்த பிறகு ( உடல் சுத்தம் ) ஸுஜுதில்  ,  அத்தஹியாத்தில ஸலாம் கொடுக்கும்  முன் , தொழுகை முடிந்த பின் ,  சேவல் கூவும் போது  , பிரயாணத்தில் இருக்கும் போதும்
              அநீதி இழைக்கப்பட்டவனின் துவாவும் , பெற்றோர் பிள்ளைகலுக்காக கேட்கும் துவாவும் , தனது  சகோதரனுக்காக அவன் இல்லாத இடத்தில் ஒரு முஸ்லீம் கேட்கும் ( ஜனாஸா தொழுகைக்கு  கூட இதான்  அடிப்படை ) துவாவும் , எதிரியுடன் யுத்தத்தில் இருக்கும் போது கேட்கும் துவாவும் ,  அதேப்போல வாரத்தில் ஜும்மா தினம் ( வெள்ளி கிழமை ) அதுவும் குறிப்பாக பகலின் கடைசி ப் பகுதியில்  , மாதங்களில் ரமளான் அதிலும் குறிப்பாக நோன்பு துறக்கும் (இஃப்தார் ) மற்றும் வைக்கும் (ஸஹர் ) நேரம் .லைலத்தில் கத்ர் இரவு ,  அரஃபாத் தினம் , பள்ளி வாசல்களில் ,  மற்றும் காஃபா வில் ஹஜருல் அஸ்வத் -காஃபாவின் வாசலுக்கும் இடையில்  , மகாமு இப்ராஹிம் இடத்திலும் , ஹஜ்ஜுடைய காலத்தில்  அரஃபா மைதானம் , மினா , முஸ்தலிஃபா  , ஸம் ஸம் நீர் அருந்தும்  போதும்  ( எதை நினைத்து குடிக்கிறோமோ அதுக்குறிய மருந்தாக -பரிகாரமாக அமையும் ) ..இப்படி சில இடங்களும் . நேரங்களும் இருக்கிறது.
                பர்ஸனல் அந்தரங்கமான காரணங்களை பார்க்கலாம் :  துவா கேட்பதுக்கு முன்னே உண்மையான  தவ்பா செய்ய வேண்டும் . தன்னிடம் தனக்கு சொந்தாமில்லாத பொருளை உறியவர்களிடம்  ஒப்படைக்க வேண்டும் .உண்ணும் உணவு , உடை , இருப்பிடம் போன்றவை ஹலாலாக இருக்கவேண்டும்  , இனி  பாவமான காரியங்கள செய்வதில்லை என்ற எண்ணமும் , கேட்கும் துவா கண்டிப்பாக அல்லாஹ் நிறை வேற்றுவான் என்ற நம்பிக்கை வைத்து  அவனிடமே அடைகலம் தேடி தன்னுடைய எல்லா காரியத்தையும்  அவனிடமே ஒப்ப்டைத்து துவா ஏற்று கொளப்படும் என்ற மன உறுதியுடன்  திரும்பத் திரும்ப கேட்பதாலும்  நமது பிரார்த்தனை நிறை வேறும்

அளவற்ற அருளாளன்

                இவ்வுலகில்  அல்லாஹ்வின்  அருட்கொடைகள்  முடிவில்லாமல் ஒவ்வொரு   வினாடியும் இறங்கிக் கொண்டே  இருக்கிறது  .. அதை அனு தினமும் பாராமல் , விளங்காமல் அப்படியே நாம் விட்டு விடுகிறோம் .எப்படி மழை ப்பொழியும்  போது நாம் சும்மா நிற்கிரோமோ  அது மாதிரியே இருந்து விட்டு  பிறகு யார் யாருக்கோ அவன் கொடுக்கிறான் . அது அவனின் தலையெழுத்து  “ நஸிப் “ என்று எளிமையாக விட்டு விலகி விடுகிறோம். .
         எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி  ,குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை   நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல .
         இறைவனின் அருள் மழை இவ்வுலகின் மீது இடைவிடாது பொழிந்துக்கொண்டு இருக்கும் போது அதனை யார் யார் எவ்வளவு பெரும் பாத்திரத்தை க்கொண்டு ஏந்துகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு  அதை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.  சிறிய அளவு  பாத்திரத்தை  ஏந்து பவர்கள் சிறிய அளவையும்  , பெரிய பாத்திரத்தை கொண்டு ஏந்துபவர்கள் பெரிய அளவையும்  பெற்றுக்கொள்வார்கள் ..சிறிய அளவு பாத்திரத்தை கொண்டு ஒருபோதும் அதனை பெரும் அளவில் பெற்றுக்கொள்ளவே முடியாது.
           அந்த  பாத்திரம் எது என்பதை நமது  ரஸுல் (ஸல் ) அவர்கள்  தெளிவாகவே நிறைய விளக்கங்களுடன்  அருமையாக சொல்லியி ருக்கிறார்கள்  அதுதான் பிராத்தனை  ’’துவா’’ படைப்பினர்  அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள்தான் ஆனால் எல்லாம்  வல்ல அல்லாஹ் தனது அடியார்களின் பால் முற்றும் முழுதாக தேவையற்றவன் .
         அல்லாஹ்தாலா அவனது அடியார்கள் அவனிடம் பிராத்தனை புரிவதை கட்டாயமாக்கினான். குர் ஆனில் சொல்லும் போது ‘’நீங்கள் என்னை அழைத்து பிராத்தனை   புரியுங்கள். நான் நிச்சயமாக உங்களு (டைய பிராத்தனை) க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக ( என்னிடம் பிராத்தனை புரிந்து ) என்னை வனங்குவதை விட்டும் பெருமை அடிப்பவர்கள் இழிவடைந்த நிலையில் நரகம் புகுவார்கள்”  .
         அது மட்டுமல்ல , அல்லாஹ் தன் அடியார்கள் அவனிடம் தமது தேவைகளை கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறான் . ஒரு தேவைக்காக திருப்பி திருப்பி துவா கேட்பவர்களை  அவன் விரும்புவதுடன் அவர்களை தன்னிடம் நெருக்கமாக்கி கொள்கிறான் .  இதையே  ரஸுலுல்லா (ஸல் ) அவர்கள் மிக எளிமையாக சொன்னது  ‘’உனது செருப்பின் வார் அறுந்து விட்டாலும் கூட தேவைக்காக அவனிடமே கேள்  ’’  .பிறகும்  நாம  அவனிடம் கேட்க வெட்கப்படுகிறோம்..கூச்சப்படுகிறோம். 
        எத்தனை முறை   ஓதினாலும் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும்  சுவர்கத்தின்  ஆடம்பரத்தையும் , அதில மனித ஜின் இனத்தவர்களுக்கும் உள்ள சிறப்பை சொல்லும் சூரா வாகிய அர்ரஹ்மானில் ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பிக்கிறான்.  
        அர்ரஹ்மான்    அல் குர் ஆன் 55:  1  ) (அவனே ) அளவற்ற அருளாளன் .சூரா ஃபாத்திஹாவின் இரண்டாவதாக  வருவதும்  அர்ரஹ்மான்  நிர் ரஹிம். அவனிடமிருந்து  கடைசியாக வந்த ஆயத்திலும் ‘’ இன்றைய தினம் என் அருட் கொடையை   உங்கள் மீது  பூர்த்தியாக்கினேன். 


((  யா.!! அல்லாஹ் ..!!  உன்னுடைய அருட்கொடையை  இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே  எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!!    வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக  மரனிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்     
    

முதல் வார்த்தை

             மனிதர்களுக்கு வசிப்பதுக்கு ஏற்றதாக   இடமாக பூமியை ஆக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில  குறிப்பிடுகிறான் .. அத்தகைய இந்த பூமி  உருண்டையின்  குறுக்களவு  சுமார் 12 ,756  கிலோ மீட்டர்கள்  . நமது பங்காளி  நிலாவின் குறுக்களவு சுமார் 3476  கிலோ மீட்டர்கள்.  ஆனால் பற்றி  எரியும் நெருப்பு   கோளமாகிய சூரியனின்  குறுக்களவோ  சுமார்  13, 92,000  கிலோ மீட்டர் .

            இந்த நமது சூரிய குடும்பத்தில் நாம மூனாவது   உறுப்பினர்  . நமக்கும் சூரியனுக்கும் இடையே  இடைவெளி சுமார்  15 கோடி கிலோ மீட்டர் . கடைசி உறுப்பினராக புளுட்டோ இருக்கிறார்.

            நமது சூரிய குடும்பத்தின் குறைந்த பட்ச மாக 1,200 கோடி கிலோ மீட்டர் கொண்ட மெகா சைஸ்  வட்ட பாதையாக இருக்கிறது ..ஆனால்  அதையும் தாண்டி சூரியனின் காந்த கதிர் வீச்சு இருக்கிறது.
        
            கேலக்ஸி எனப்படும் பால் வீதி மண்டலமாகிய நமக்கான வான் வெளி  பிரதேசத்தில  நமது சூரியன்  போல ,   சூரிய குடும்பங்களைப்போல  கிட்டதட்ட 200 மில்லியன்   அதாவது (  1 மில்லியன் =10 லட்சம் ) 20,00,00,000  சூரியன்களை , நட்சத்திரங்களை ( சூரியனை  விஞ்ஞானிகள் ஒரு நடச்த்திரமாகதான்  குறிப்பிடுகிறார்கள் )  அல்லாஹ் படைத்திருக்கிறான் 

           இப்போது மொத்த பால் வீதி மண்டலமாகிய கேலக்ஸியின் அளவு என்பது நமது கற்பனைக்கு கூட எட்டவில்லைதானே..!!  அதைப்போல கோடிக்கனக்கான  பால் வீதி மண்டலங்கள் இந்த பிரபஞ்சத்தில உள்ளது.  எதுக்கெடுத்தாலும் நாம மெகா , பிரம்மாண்டம் என்று சொல்லும் வார்த்தையின் அர்த்தத்தை  தாண்டி   மெகா...மெகா..மெகா பிரம்மாண்டமான இந்த  பிரபஞ்சத்தை படைத்து அதை ஆளுகினற  அல்லாஹ்   மனிதனுக்கு  நேர் வழிக்காட்டக்கூடிய தன்னுடைய வேதத்தை    எப்படி துவக்குகிறான் தெரியுமா...?....!!!

     அல் ஹம்துலில்லாஹி  ரப்பில ஆலமீன்  ((  எல்லா புகழும்  அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும்  நாயனான அல்லாஹ் ஒருவனுக்கே  ஆகும்    ))     அல் குர் ஆன் :  1

அல் ஃபாத்திஹா

( 1 )  அளவற்ற அருளான் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்  ((  ஆரம்பம் செய்கிறேன் ))

 ( 2 ) அனைத்து புகழும்  அகிலத்தாரின்  இரட்கனாகிய அல்லாஹுக்கே உரியது

( 3 ) (அவன் ) அளவற்ற அருளாளன் : மிகக் கிருபையுடையவன்

(4)  (அவனே நியாயத்)  தீர்ப்பு நாளின்  அதிபதி

(5)  (எங்கள் இரட்சகா !) உன்னையே நாங்கள் வண்ங்குகிறோம்; உன்னிடமே   நாங்கள் உதவியும் தேடுகிறோம்

 (6 )நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!

(7)   எவர்களின்  மீது  நீ அருள் புரிந்தாயோ  அத்தகையோரின் வழி(யில் நடத்துவாயாக)      ( அது உன் )  கோபத்திற்குள்ளானோர்களின் வழியல்ல .அன்றியும் வழி கெட்டவர்களின் வழியுமல்ல