அளவற்ற அருளாளன்

                இவ்வுலகில்  அல்லாஹ்வின்  அருட்கொடைகள்  முடிவில்லாமல் ஒவ்வொரு   வினாடியும் இறங்கிக் கொண்டே  இருக்கிறது  .. அதை அனு தினமும் பாராமல் , விளங்காமல் அப்படியே நாம் விட்டு விடுகிறோம் .எப்படி மழை ப்பொழியும்  போது நாம் சும்மா நிற்கிரோமோ  அது மாதிரியே இருந்து விட்டு  பிறகு யார் யாருக்கோ அவன் கொடுக்கிறான் . அது அவனின் தலையெழுத்து  “ நஸிப் “ என்று எளிமையாக விட்டு விலகி விடுகிறோம். .
         எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி  ,குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை   நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல .
         இறைவனின் அருள் மழை இவ்வுலகின் மீது இடைவிடாது பொழிந்துக்கொண்டு இருக்கும் போது அதனை யார் யார் எவ்வளவு பெரும் பாத்திரத்தை க்கொண்டு ஏந்துகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு  அதை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.  சிறிய அளவு  பாத்திரத்தை  ஏந்து பவர்கள் சிறிய அளவையும்  , பெரிய பாத்திரத்தை கொண்டு ஏந்துபவர்கள் பெரிய அளவையும்  பெற்றுக்கொள்வார்கள் ..சிறிய அளவு பாத்திரத்தை கொண்டு ஒருபோதும் அதனை பெரும் அளவில் பெற்றுக்கொள்ளவே முடியாது.
           அந்த  பாத்திரம் எது என்பதை நமது  ரஸுல் (ஸல் ) அவர்கள்  தெளிவாகவே நிறைய விளக்கங்களுடன்  அருமையாக சொல்லியி ருக்கிறார்கள்  அதுதான் பிராத்தனை  ’’துவா’’ படைப்பினர்  அனைவரும் அல்லாஹ்வின் பால் தேவையுள்ளவர்கள்தான் ஆனால் எல்லாம்  வல்ல அல்லாஹ் தனது அடியார்களின் பால் முற்றும் முழுதாக தேவையற்றவன் .
         அல்லாஹ்தாலா அவனது அடியார்கள் அவனிடம் பிராத்தனை புரிவதை கட்டாயமாக்கினான். குர் ஆனில் சொல்லும் போது ‘’நீங்கள் என்னை அழைத்து பிராத்தனை   புரியுங்கள். நான் நிச்சயமாக உங்களு (டைய பிராத்தனை) க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக ( என்னிடம் பிராத்தனை புரிந்து ) என்னை வனங்குவதை விட்டும் பெருமை அடிப்பவர்கள் இழிவடைந்த நிலையில் நரகம் புகுவார்கள்”  .
         அது மட்டுமல்ல , அல்லாஹ் தன் அடியார்கள் அவனிடம் தமது தேவைகளை கேட்பதால் மகிழ்ச்சி அடைகிறான் . ஒரு தேவைக்காக திருப்பி திருப்பி துவா கேட்பவர்களை  அவன் விரும்புவதுடன் அவர்களை தன்னிடம் நெருக்கமாக்கி கொள்கிறான் .  இதையே  ரஸுலுல்லா (ஸல் ) அவர்கள் மிக எளிமையாக சொன்னது  ‘’உனது செருப்பின் வார் அறுந்து விட்டாலும் கூட தேவைக்காக அவனிடமே கேள்  ’’  .பிறகும்  நாம  அவனிடம் கேட்க வெட்கப்படுகிறோம்..கூச்சப்படுகிறோம். 
        எத்தனை முறை   ஓதினாலும் மனதுக்கு சந்தோஷம் கொடுக்கும்  சுவர்கத்தின்  ஆடம்பரத்தையும் , அதில மனித ஜின் இனத்தவர்களுக்கும் உள்ள சிறப்பை சொல்லும் சூரா வாகிய அர்ரஹ்மானில் ஆரம்பமே இப்படித்தான் ஆரம்பிக்கிறான்.  
        அர்ரஹ்மான்    அல் குர் ஆன் 55:  1  ) (அவனே ) அளவற்ற அருளாளன் .சூரா ஃபாத்திஹாவின் இரண்டாவதாக  வருவதும்  அர்ரஹ்மான்  நிர் ரஹிம். அவனிடமிருந்து  கடைசியாக வந்த ஆயத்திலும் ‘’ இன்றைய தினம் என் அருட் கொடையை   உங்கள் மீது  பூர்த்தியாக்கினேன். 


((  யா.!! அல்லாஹ் ..!!  உன்னுடைய அருட்கொடையை  இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே  எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!!    வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக  மரனிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்     
    

3 comments:

  1. ஸாதிகா Says:

    //(( யா.!! அல்லாஹ் ..!! உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!! வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரனிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன்
    // ஆமீன்////////!

    Posted on October 17, 2010 at 10:10 AM  

    அன்புடன் மலிக்கா Says:

    யா.!! அல்லாஹ் ..!! உன்னுடைய அருட்கொடையை இவ்வுலகிலும் , அவ்வுலகிலும் பூரணமாக அனுபவிக்கும் உடல் நலத்தையும் , மன நலத்தையும் , கூடவே எப்போதும் உன்னை மறக்காத ஆத்ம பலத்தையும் கொடுப்பாயாக..!! வாழ்வின் முடிவில் உனக்கு பிடித்த உண்மை முஸ்ஸீமாக மரணிக்க செய்வாயாக ..!! ஆமீன் ..ஆமீன்..யாரப்பில் ஆலமீன் .//

    மிக அருமையான விளக்கம் அண்ணாத்தே. தொடர்ந்து தொடருங்கள் இறைவனின் துணையுடன்..

    Posted on October 18, 2010 at 3:36 PM  

    எம் அப்துல் காதர் Says:

    //எப்படி நம் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள் கையால் எடுக்காத வரை நம் வாய்க்கு போகாதோ அதே மாதிரி, குறைஞ்ச பட்சம் யாராவது அதை எடுத்து நமக்கு ஊட்டாத வரை நமக்கு கிடைக்காது. இது அந்த மனிதனின் தவரே.தவிர படைத்தவனின் தவறல்ல. //

    ///உண்மை/உண்மை/உண்மை///

    Posted on November 4, 2010 at 1:31 AM  

Post a Comment