முதல் வார்த்தை

             மனிதர்களுக்கு வசிப்பதுக்கு ஏற்றதாக   இடமாக பூமியை ஆக்கியதாக அல்லாஹ் தன் திருமறையில  குறிப்பிடுகிறான் .. அத்தகைய இந்த பூமி  உருண்டையின்  குறுக்களவு  சுமார் 12 ,756  கிலோ மீட்டர்கள்  . நமது பங்காளி  நிலாவின் குறுக்களவு சுமார் 3476  கிலோ மீட்டர்கள்.  ஆனால் பற்றி  எரியும் நெருப்பு   கோளமாகிய சூரியனின்  குறுக்களவோ  சுமார்  13, 92,000  கிலோ மீட்டர் .

            இந்த நமது சூரிய குடும்பத்தில் நாம மூனாவது   உறுப்பினர்  . நமக்கும் சூரியனுக்கும் இடையே  இடைவெளி சுமார்  15 கோடி கிலோ மீட்டர் . கடைசி உறுப்பினராக புளுட்டோ இருக்கிறார்.

            நமது சூரிய குடும்பத்தின் குறைந்த பட்ச மாக 1,200 கோடி கிலோ மீட்டர் கொண்ட மெகா சைஸ்  வட்ட பாதையாக இருக்கிறது ..ஆனால்  அதையும் தாண்டி சூரியனின் காந்த கதிர் வீச்சு இருக்கிறது.
        
            கேலக்ஸி எனப்படும் பால் வீதி மண்டலமாகிய நமக்கான வான் வெளி  பிரதேசத்தில  நமது சூரியன்  போல ,   சூரிய குடும்பங்களைப்போல  கிட்டதட்ட 200 மில்லியன்   அதாவது (  1 மில்லியன் =10 லட்சம் ) 20,00,00,000  சூரியன்களை , நட்சத்திரங்களை ( சூரியனை  விஞ்ஞானிகள் ஒரு நடச்த்திரமாகதான்  குறிப்பிடுகிறார்கள் )  அல்லாஹ் படைத்திருக்கிறான் 

           இப்போது மொத்த பால் வீதி மண்டலமாகிய கேலக்ஸியின் அளவு என்பது நமது கற்பனைக்கு கூட எட்டவில்லைதானே..!!  அதைப்போல கோடிக்கனக்கான  பால் வீதி மண்டலங்கள் இந்த பிரபஞ்சத்தில உள்ளது.  எதுக்கெடுத்தாலும் நாம மெகா , பிரம்மாண்டம் என்று சொல்லும் வார்த்தையின் அர்த்தத்தை  தாண்டி   மெகா...மெகா..மெகா பிரம்மாண்டமான இந்த  பிரபஞ்சத்தை படைத்து அதை ஆளுகினற  அல்லாஹ்   மனிதனுக்கு  நேர் வழிக்காட்டக்கூடிய தன்னுடைய வேதத்தை    எப்படி துவக்குகிறான் தெரியுமா...?....!!!

     அல் ஹம்துலில்லாஹி  ரப்பில ஆலமீன்  ((  எல்லா புகழும்  அகிலங்கள் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும்  நாயனான அல்லாஹ் ஒருவனுக்கே  ஆகும்    ))     அல் குர் ஆன் :  1

6 comments:

  1. Anisha Yunus Says:

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
    may Allah bless you with the best of both worlds. Get going bhai, with interesting articles from Al Qur'an & Ahadeeth :)

    JZK

    wa Salam

    Posted on October 16, 2010 at 12:57 AM  

    அன்புடன் மலிக்கா Says:

    அல்ஹம்துலில்லாஹ்
    இறைவனின் துணையுடன் இனிதே துவங்கி இப்பயணம் எல்லா மனங்களையும் சென்றடையட்டும்..

    தொடர்ந்து நல்லவைகளின் பக்கம் நம்மையும் நம் சந்ததிகளையும் அழைத்துசெல்ல எல்லாம் வல்ல இறைவனிடன் இருகரம் ஏந்தி கேட்ப்போம்..

    Posted on October 16, 2010 at 10:03 AM  

    ஜெய்லானி Says:

    @@@அன்னு--//

    அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
    may Allah bless you with the best of both worlds. Get going bhai, with interesting articles from Al Qur'an & Ahadeeth :)
    JZK
    wa Salam //

    வாங்க சகோஸ் ..!! இன்ஷா அல்லாஹ் முடிஞ்சவரை சரியாக எழுத முயற்சி செய்கிறேன் ..உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி..!!

    Posted on October 16, 2010 at 3:27 PM  

    ஜெய்லானி Says:

    @@@அன்புடன் மலிக்கா--//

    அல்ஹம்துலில்லாஹ்
    இறைவனின் துணையுடன் இனிதே துவங்கி இப்பயணம் எல்லா மனங்களையும் சென்றடையட்டும்..//

    என்னால முடிஞ்ச வரை சரியா எழுத முயற்சி செய்கிறேன்

    //தொடர்ந்து நல்லவைகளின் பக்கம் நம்மையும் நம் சந்ததிகளையும் அழைத்துசெல்ல எல்லாம் வல்ல இறைவனிடன் இருகரம் ஏந்தி கேட்ப்போம்..//

    ஆமீன்.. வாங்க மலீகாக்கா ..!! வருகைக்கு ரொம்ப நன்றி.

    Posted on October 16, 2010 at 3:40 PM  

    ஸாதிகா Says:

    இஸ்லாத்தினையும் விஞ்ஞானத்தினையும் இணைத்து அழகிய கட்டுரை.நல்ல தகவல்.

    Posted on October 17, 2010 at 10:13 AM  

    Jaleela Kamal Says:

    தொடருங்கள் எல்லோரும் பயனடையட்டும்.

    Posted on October 23, 2010 at 6:44 PM  

Post a Comment